Friday, June 16, 2017

Thirukollikadu Sri Pongu Saneeshwara Bhagavan

கெடு பலன் நீக்கும் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்!


காவிரி நதியை ஒட்டி அமைந்துள்ள நவக்கிரக பரிகார ஸ்தலங்கள் எண்ணிலடங்காதவை. அவற்றில் காவிரியின் தென்கரையில் திருத்துறைப்பூண்டி அருகே அமைந்துள்ள திருக்கொள்ளிக்காடு சனி பகவானின் ஸ்தலம் ஆகும்.

Amma arulmigu Sri Mirthupadanayagi udanurai Appan arulmigu Sri Agneeshwarar, Image Source

பஞ்சினும் மெல்லடியாள் உடனுறை அக்னீஸ்வரர் அருள்பாலிக்கும் இந்த தலத்துக்கு அக்னிபுரி என்ற பெயரும் உண்டு. இங்கு அக்னி பகவான் சிவபூஜை மேற்கொண்டதால் இத்தகைய பெயர் வந்தது. இக்கோயிலில் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார் பொங்கு சனீஸ்வரர்.

சனியின் சிறப்பு


நவ கிரகங்களிலேயே ஈஸ்வரர் பட்டம் பெற்றவர் சனி பகவான் ஒருவர்தான். மந்தன் எனவும் மந்தகாரகன் எனவும் அறியப்படுகிறார் சனி. சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சனி பகவானுக்கு, "நவ கோள்களில் முக்கியத்துவம் மிகுந்த இடத்தையும், கர்மவினைகளுக்கு ஏற்ப தண்டனை அளிக்கும் பணியையும்" அருள்கிறார் ஈஸ்வரன்.

மனிதர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தண்டனைகளையும் பலன்களையும் அளிக்கத் தொடங்குகிறார் சனி பகவான். மனிதர்களின் மனம் என்று தண்டனைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அப்படியே ஏற்றாலும் செய்த பாவங்களை மனதில் நினைத்து செய்தவற்றுக்காக வருந்துபவர்கள் யார் இருக்கிறார்.

எனினும், சனி பகவான் தன் பணியை தீவிரமாக தொடர்ந்ததால் அவர் மீது பெரும் அச்சம் ஏற்படுகிறது. அவரது கடும் தண்டனையால் நவ கோள்களில் அஞ்சத் தகுந்தவராகவும், "சனி ஒரு தோஷம்" என்ற பெயரும் அவருக்குக் கிடைக்கிறது.

Sri Sani Bhagavan's Siva Pooja at Agni Vanam, Image Source


இதனால் வேதனையுற்ற சனி பகவான், தாமும் மற்ற கோள்களைப் போல் அருள்பாலிக்கவும், கேட்ட வரங்களைத் தருபவராகவும் மாற விரும்பி ஈஸ்வரனை நோக்கி இத்தலத்தில் (அக்னிவனம்) தவம் மேற்கொண்டார். அதன்மூலம் ஈஸ்வரர் பட்டமும் பெறுகிறார்.

Amma arulmigu Sri Mahalakshmi, arulmigu Sri Pongu Sani Bhagavan, Agni Vanam, Image Source


அதன் மூலம் அவரிடம் இருந்து தண்டனை அளிக்கும் ஆயுதங்கள் மறைந்து அன்பை பரப்பும் ஏர் கலப்பை கிடைக்கிறது. அருகே மகா லட்சுமியும் அமர்கிறார். நேர் எதிரே அவரது குருவான பைரவரும் அமைந்துள்ளார். (குரு பார்க்க கோடி நன்மை எனும் விதியின் அடிப்படையில்).

Arulmigu Guru Sri Bairavar, Thirukollikadu, Image Source

இதன்மூலம் பொங்கு சனீஸ்வரராக மாறி, சனி தசை, சனி புத்தி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி போன்ற காலங்களில் மனிதர்களின் கெடு பலன்களை குறைத்து நற்பலன்களை பரப்புகிறார். இங்குள்ள பொங்கு சனீஸ்வரரையும், பைரவரையும் ஒரே நேரத்தில் குடும்பத்துடன் வழிபடுவது சிறப்புக்குரியதாகும். அதன்மூலம் கூடினார்க்கு சனியின் கேடில்லை என்ற நிலை கிடைக்கிறது.

ஜனனகால ஜாதகத்தில் சனியால் பாதிக்கப்பட்டவர்கள், சனி தசை அல்லது புத்தி நடப்பவர்கள், கோட்சாரப்படி அஷ்டம சனி உள்ளவர்கள் (தற்போது  2017ல் மேஷ ராசியினரும், 2017 செப்டம்பருக்கு பிறகு ரிஷப ராசியினரும்) சனி கோளின் ஆதிக்கத்தில் உள்ள அனைவரும், இந்த ஸ்தலத்தில் பொங்கு சனீஸ்வரரை வழிபட்டு எள் தீபம் ஏற்றுவதும், எள் உருண்டைகளை தானமிடுவதும் மிக மிக சக்தி வாய்ந்த, மிக அவசியமான பரிகாரமாகும்.

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரரை வழிபட்டு கெடு பலன் நீங்கி, பாதிப்பு குறைந்த பல அன்பர்கள் அதை நேரில் வந்து சிலாகித்து தெரிவித்துள்ளனர். எனவே, அன்பர்கள் அனைவரும் இத்தலத்துக்கு ஒருமுறையேனும் சென்று சனி தீர்த்தத்தில் கால் நனைத்து, சனி பகவானை வழிபட்டு பலனடைய வேண்டுகிறேன்.


முகவரி:
அக்னீஸ்வரர் திருக்கோயில்
திருக்கொள்ளிக்காடு போஸ்ட் - 610 205
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம்
04369 - 237454
04366 - 325801

Other ineresting weblinks:

 

 Om Guruve Namaha...


நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Wednesday, June 7, 2017

Vaikasi Visakam

முருகன் அவதரித்த வைகாசி விசாகம்


Arulmigu Sri Thiruchendhur Murugan


  • 2018 வைகாசி விசாகம்  - 28.05.2018, திங்கட்கிழமை
  • 2017 வைகாசி விசாகம்  - 07.06.2017, புதன்கிழமை

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம் முருகன் அவதரித்த புனித நாளாகும். அசுரர்களின் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வர சிவபெருமானின் மூன்றாவது கண்ணில் இருந்து ஜனனித்த ஆறு நெருப்புப்  பொறிகளின் உஷ்ணம், அக்னி பகவானையும் சுட்டது. எனவே, இதை உஷ்ணாவதாரம் என்றும் கூறலாம். அக்னி பகவானால் சரவணப் பொய்கையில் விடப்பட்ட ஆறு நெருப்புப் பொறிகளும் குளிர்ந்து அழகிய மழலைகளாயின. அவற்றுக்கு கார்த்திகைப் பெண்கள் பால் தந்து பசியாற்ற, ஓருடலில் ஆறுமுகத்துடன் அவதரித்தார் தமிழ்க் கடவுள்.


இந்த அழகிய நன்னாளில் முருகனை மனதில் நிறுத்தி வழிபடுவதும், குறிப்பாக உண்ணா நோன்பிருப்பதும், மவுன விரதம் கடைபிடிப்பதும் மிகவும் சக்திவாய்ந்த பரிகாரங்களாக தமிழர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.

Arulmigu Amma Valli Thayar, Amma Devasena Thayar samedha Sri Senthilnathan. Image source

திருமணத் தடைகள் நீங்க மண வாழ்வு கைகூடவும், மகப்பேறு பாக்கியத்தை பெற்று மழலைகள் ஈனவும், வம்பு வழக்குகளால் அலைகழிக்கப்படுபவர்கள் எதிரிகளை வீழ்த்தவும், எல்லாம்வல்ல முருகன் அருளும் 16 செல்வங்களும் வாழ்வில் நிறைந்திருக்கவும் வைகாசி விசாகத்தில் விரதமிருப்பதும், மவுனம் காப்பதும் அவசியமாகும். இந்த எளிய ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரத்தை மேற்கொண்டு முருகனை மனதில் நிறுத்தி வழிபட்டு அன்பர்கள் அனைவரும் பலனடைய வேண்டுகிறேன்.

Vaikasi Vishakam abhisekham for Sri Skandan at Kadavul Temple, Hawaii. Image source & Information



Sri Skandan alangaram after Vishakam abhisekam, Kadavul Temple, Hawaii. Image source & Information
Interesting internet blogs on Murugan and Vaikasi Visakam:

முருகன், தனிவேல் முனி, நம் குரு ... என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே


Source: Youtube, Renedering of Sri Pamban Swamigal's Kumarasthavam (குமாரஸ்தவம்) by Thiru Seergazhi Govindarajan

Om Guruve Namaha...



நேசத்துடன்

குபேரன் ஜோதிடர்

Tuesday, April 4, 2017

Panguni Uthiram

 பங்குனி உத்திரத்தில் பேரருள் புரியும் தமிழ்க் கடவுள்!

 
Sri Shanmuga Subramanya Swamy painting by Raja Ravi Verma, Credit - Wikipedia

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தெய்வமாய் விளங்கும் முருகனுக்கு என்று சில விசேஷ தினங்கள் உண்டு. அவை தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் ஆகிய தினங்களாகும்.

தாயிடம் இருந்து முருகன் வேலை பெற்ற தினம் தைப்பூசமாகும். வெற்றியைக் குறிக்கும் அன்றைய தினம் முருக வழிபாட்டுக்கு சிறந்த தினமாகும். வைகாசி விசாகம் என்பது முருகனின் பிறந்த நாள். தமிழைப் போன்ற இளமையும் அழகும் மிளிரும் முருகக் கடவுளை அன்றைய தினத்தில் வழிபடுவது சிறந்ததாகும்.

Arulmigu Thayar Valli, Thayar Devasena samedha Sikkal Singaravelan, Picture Credit
Story of Sikkal Singaravelan, Picture Credit & More Information - Dinamalar
  
இதில் பங்குனி உத்திரத்துக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. மங்கலம் மற்றும் சுபகாரியங்களுக்கான தினமாக பங்குனி உத்திரம் விளங்குகிறது. கிரகங்களில் மாங்கல்யத்துக்கும், திருமணத்துக்கும் காரண கர்த்தாவான செவ்வாய் பகவானின் அதிபதி என்பதால், முருகனை பங்குனி உத்திரத்தில் பெண்கள் வழிபடுவது மிகவும் அவசியம்.

அவ்வகையில் பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்த விசேஷ தினமாகிறது. திருமணத் தடைகள், மகப்பேறு பிரச்சினைகள், உடல் ஆரோக்கியம், இல்லறத்தில் சிக்கல், மன சிக்கல்கள், ஜெனன கால ஜாதகங்களில் இருக்கும் குறைபாடுகள் இவற்றை நிவர்த்தி செய்து கொள்ள பங்குனி உத்திரமே மிகவும் எளிமையான மற்றும் சக்தி வாய்ந்த பரிகார தினமாகும்.

Arulmigu Thayar Vallli, Thayar Devasena sametha Thiruthani Subramanya Swami, Picture Credit & Additional Information - Dinamalar
வரும் மார்ச் 30-ம் தேதி 2018 (வெள்ளிக்கிழமை) { 2017: ஏப்ரல் 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) } பங்குனி உத்திரமாகும். அன்றைய தினம் மவுன விரதம் மற்றும் விரதம் மேற்கொண்டு முருகனை மனதில் நிறுத்தி வழிபட்டால் மேற்கண்ட அனைத்து தடைகளும் நீங்கப் பெறுவது உறுதி. 16 செல்வங்களுக்கும் அதிபதியான முருகக் கடவுளை அன்பர்கள் அனைவரும் பங்குனி உத்திரத்தில் வழிபட்டு எல்லா வளங்களையும் பெற பிரார்த்திக்கிறேன்.


செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. 

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே.  
 

Amma Sri Valli Thayar, Amma Sri Devasena Thayar sametha Arulmigu Appan Sri Subramaniya Swamy, Vallakottai, Source & more information
 

   

Om Guruve Namaha.....



நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Friday, March 31, 2017

Sri Pamban Kumaragurudasa Swamigal

மனநலம் நல்கும் பாம்பன் ஸ்வாமிகள்!

 

Arulmigu Sri Pamaban Kumaragurudasa Swamigal (Picture credit)














நகரமயத்துக்கும் வேகமான வாழ்க்கைக்கும் உதாரணமாகிவிட்ட சென்னையில் கலியுக காமதேணுவாக மக்களுக்கு நல்லருள் பரப்புகிறது திருவான்மியூரில் உள்ள பாம்பன் ஸ்வாமிகள் ஜீவசமாதி.

1850-ம் ஆண்டு ராமேசுவரம் தீவில் உள்ள பாம்பன் பகுதியில் பிறந்த குமர குருதாச ஸ்வாமிகள் தமிழாலும், கந்தர் சஷ்டி கவசத்தாலும் ஈர்க்கப்பட்டார். எத்தனையோ தமிழ்ப் பாடல்களை பிற்காலத்தில் அவர் படைத்தாலும் அவர் இயற்றிய சண்முகக் கவசம் நீங்கா புகழ் பெற்றது.

தமிழின் மீதும், தமிழ் கடவுளின் மீது எல்லையில்லா ஈர்ப்பு கொண்டு அவர் மேற்கொண்ட தவத்தால், கலியுகத்தில் முருகனின் திருக்காட்சியைக் காணும் பெரும் பாக்கியத்தை பெற்றார். 1894-ம் ஆண்டு ராமநாதபுரத்துக்கு அருகே பிரப்பன்வலசை பகுதியில் அவர் மேற்கொண்ட அருந்தவத்தால் முருகனே நேரில் காட்சியளித்து அருள்பாலித்ததாக அவரது சீடர்கள் பதிவு செய்துள்ளனர்.

அருணகிரிநாதர் மீது கொண்ட பேரன்பால் அவரை ஞானகுருவாக ஏற்று பிற்காலத்தில் "உபய அருணகிரியார்" என போற்றப்பட்டார். அவரது வடமொழிப் புலமையையும், உபநிடதங்களை உடனுக்குடன் தமிழில் விவரிக்கும் பேராற்றலையும் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் தனது நூல்களில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரது கனவுகளில் முருகனே வந்து நல்வழிகாட்டி சைவப் பணியில் ஈடுபடுத்தியதாக அவரது சீடர்கள் கூறுகின்றனர். உடல்நலிவுற்று சென்னை பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, ஆங்கிலேயே டாக்டர்கள் கூட கைவிட்ட நிலையில், மயிலேறி வந்த மருகனால் உடல்வினைகள் நீங்கியதால் இன்றும், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் "மயூர சேவன விழா" திருவான்மியூர் ஜீவ சமாதியில் கொண்டாடப்படுகிறது.

1929-ல் முக்தியடைந்த பாம்பன் ஸ்வாமிகள், திருவான்மியூரில் ஜீவசமாதியாக குடி கொண்டு அண்டியவர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மனநலம் குன்றிய குழந்தைகள், மனப் பிழற்சி, தாளாத மன உளைச்சல், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அன்பர்கள், திருவான்மியூர் பாம்பன் ஜீவசமாதியில் பவுர்ணமி தினத்தில் இரவு முழுவதும் தங்கி வழிபட்டும், தியானம் செய்தும் பரிபூரண குணமடைந்து வருகின்றனர். பாம்பன் ஸ்வாமிகளின் அருளால் பூரண மனநலம் பெறுவது உறுதி.

Sri Pamban Swamigal, (Picture credit)

பித்ரு தோஷத்துக்கும், அஷ்டம குரு மற்றும் குருப் பார்வையின்மையால் வரும் பிரச்சினைகள், குரு பகவானின் அருட்கடாட்சத்தைப் பெற திருவான்மியூர் பாம்பன் ஸ்வாமிகள் ஜீவ சமாதியில் வியாழக்கிழமைதோறும் சென்று வழிபடுவது அவசியமாகும்.

வேகமான வாழ்க்கையில் அன்பையும் ஆன்மீகத்தையும் தொலைத்துவிட்டதாக ஏங்கும் அன்பர்கள் அனைவரும் திருவான்மியூர் பாம்பன் ஸ்வாமிகள் ஜீவசமாதி எனும் கலியுக காமதேணுவை இறுகபிடித்துக் கொள்வது நலம்.

  Velum Mayilum Thunai

 Om Guruve Namaha....

   

தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Thursday, March 30, 2017

Thangal Sri Mounaguru Swamigal Jeeva Samadhi

இருந்தும் இல்லாமல் இரு 

 

Thangal Ashram Sri Mounaguru Swmaigal, Photo credit


Myilai Sri Sundara Ram Swamigal, Photo credit




Om Guruve Namaha.... 

தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Thursday, March 23, 2017

Shiva, the Mother

சுடுகாட்டில் சிவன் ஏன் ??? மாபெரும் கருணையை உணரவேண்டி !!!!

 நமசிவாய


சிவன் சுடுகாட்டில் ஆடும் சாமி!!! என்று இன்று பலர் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி??? மெய் உணராமல் இருப்பவர்கள், மெய் உணரவேண்டி ஈசன் திருவருளால் இப்பதிவு.

மெய் உணர்ந்து, மெய்யை பற்றி இன்புறும் அடியார்கள் பாதம் பணிகிறேன்,
சுடுகாடு :
உயிராகிய மெய், இருந்த கூடுஆகிய உடலை விட்டு பிரிந்த பின், கூடுஆகிய உடலை ( பயனற்ற கூட்டை ) நெருப்பு கொண்டு எரிக்கும் இடம்.

சுடுகாட்டில் உயிரின் நிலை :
உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம், உயிர்யற்ற உடல் பிணம் ( சவம் ), 50 – 60 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும்போது, தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் பரிதவிக்கும், ( 1 ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு பிரியும்போது ஏற்படும் உணர்வு போல - 50 – 60 ஆண்டு காலம் இருந்த கூடு )
தமக்கு என்றும் நிரந்தரம் நினைத்து பேணி காத்த உறவுகள் அனைத்தும் உடலை எரித்துவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிட்டனர், இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமது இல்லை என்று மெய்யை உணர்ந்து பரிதவிக்கும் போது.

சுடுகாட்டில் சிவம் :
உயிர் பரிதவிக்கும் போது மாபெரும் கருணையாளன் நம்பெரும் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அபயம் அளிக்கிறார்,

இதை உணர்த்தவே அப்பர் பெருமான் “ திருஅங்கமாலை “ தேவாரத்தில்
"உற்றார் ஆருளரோ - உயிர் கொண்டு போகும்பொழுது குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ." மிக தெளிவாக கூறியுள்ளார்.

யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்ப்பட்டு பரிதவிக்கும் நேரத்தில் கருணையுடன் அடைக்கலம் தந்து அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று கூறுவது எவ்வளவு சிறுமை !!! என்று உணருங்கள் .

சுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை, அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன், நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெருமும் கருணையோடு காக்கிறான் என்று உணர்த்தவே, ஈசன் திருவருளால் இப்பதிவு.

உய்வு பெறவேண்டிய உயிர்கள் உய்யும் பொருட்டு


Arulmigu Anandathandva Natarajar, (Thillai Vanam) Chidambaram. Image Source


திருச்சிற்றம்பலம்


Om Guruve Namaha....


தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Thursday, February 16, 2017

Oppliappan Temple (உப்பிலியப்பன் கோவில், திருநாகேஸ்வரம்)

உப்பிலியப்பன் கோவில், திருநாகேஸ்வரம்

Oppu illa Appan, Oppliappan!



உப்பிலியப்பன் கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவுர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும்.

மூலவர் - உப்பிலியப்பன்
உற்சவர் - பொன்னப்பன்
அம்மன் - பு மா தேவி
பழமை - 1000 - 2000 வருடங்கள்
ஊர் - திருநாகேஸ்வரம்
மாவட்டம் - தஞ்சாவுர்


 தல வரலாறு

 

 🌠 மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான புமாதேவி, விஷ்ணுவிடம், எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள், என்று கேட்டாள்.

🌠 மகாவிஷ்ணு அவளிடம், நீ புலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய் (துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய், என்றார். இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார். 

🌠 லட்சுமியின் அம்சமான புமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே கிடப்பதைக் கண்டார். தன் ஞானதிருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை அறிந்து, துளசி என பெயர்சுட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது, திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார்... மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை.

🌠 மேலும், சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத்தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது என்று ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை, உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார். 

Thirunageshwaram (Thiruvinnagaram), Arulmigu Oppliappan, Thayar Bhoomadevi, Sri Markandaya Maharishi Image source


🌠 தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமையுடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன் எழுந்தருளினார். துளசிதேவி அவர் மார்பில் துளசிமாலையாக மாறி நிரந்தரமாக தங்கினாள்.

 தல சிறப்பு


🌿 மார்க்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர். இத்தலம் செண்பகவனம், ஆகாசநகரம், திருவிண்ணகர், மார்க்கண்டேய க்ஷேத்திரம், ஒப்பிலியப்பன் கோவில், தென் திருப்பதி என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. 


🌿 உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.

பிரார்த்தனை  

 

👉 ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என நம்பப்படுகிறது. திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன் கருதப்படுகிறார்.

Thirunageshwaram, Thayar Seetha Samadha Sri Ramar. Image Source


👉 இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் தம்பதிகளின் ஒற்றுமை அதிகரிக்கும். சகிப்புத்தன்மை அதிகரிக்கும்.

Om Guruve Namaha....


தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்