பேசும், கேட்கும் திறன் நல்கும் ஓசைநாயகி அம்மன்!
நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
ஞான சமந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்
நன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சும்
கோளி லிப்பெரும் கோயிலுள் ளானைக்
கோலக் காவினிற் கண்டு கொண்டேனே....
அருள்மிகு ஒம் ஒசைநாயகி சமேத தாளபுரிஸ்வரர், திருகோலக்கா சீர்காழி Source |
சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா அல்லது
திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார். சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இறைவனைத் துதித்து பதிகம் பாடினார். கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார். இறைவி அதற்கு
தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆதலின் இத்தலத்துஅம்பிகைக்கு ஓசை
கொடுத்த நாயகி என்று பெயர். சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனைசுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார். சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இறைவனைத் துதித்து பதிகம் பாடினார். கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார். இறைவி அதற்கு
தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆதலின் இத்தலத்துஅம்பிகைக்கு ஓசை
கொடுத்த நாயகி என்று பெயர். சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனைசுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
சிவன், திருநானசம்பந்தர்க்கு பொற்தாளம் வழங்கி வாழ்துதல், Source |
பார்வதிதேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர், பல தலங்களுக்கு சென்று, தனது சிறு கைகளால் தாளம் போட்டு பாடுவதைப்பார்த்தார் சிவன். குழந்தையின் கைகள் வலிப்பது பொறாமல், அவருக்கு தங்கத்தால் ஆன இரண்டு தாளங்களை கொடுத்தார். தட்டிப்பார்த்தார் சம்பந்தர். ஆனால் அதிலிருந்து ஓசை வரவில்லை. உடனே அந்த தாளத்திற்கு ஓசை கொடுத்தாள் அம்மன். எனவே தான் இங்குள்ள மூலவர் தாளபுரீஸ்வரர் எனவும், அம்மன் ஓசைநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
இசைக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் இசையில் வல்லவராகலாம். கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். இங்குள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லா செல்வங்களும் அருளக்கூடியவள். திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்கா எனப்பட்டது. ஓசை நாயகியின் சன்னதியில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழை அடைவார்கள் என்பது கண்கூடான உண்மை. தற்போது திருத்தாளமுடையார் கோவில் என அழைக்கப்படுகிறது.
வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, ஓசை நாயகியிடம், ""ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே, பேசும் சக்தியைக்கொடு,' என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு, தொடர்ந்து 6 வாரம் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்
Arulmigu Appan Sri Thalapureeshwarar, Source
சீர்காழி திருக்கோலக்கா தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ
தாளபுரீஸ்வர ஸ்வாமி ஆலயம். இக்கோயிலை யார் அறிந்திருப்பரோ இல்லையோ ENT
மருத்துவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில்
இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட இங்கு சாமான்ய மக்கள் முதல்,
மேட்டுகுடியினர் வரை வந்து செல்வதை காண முடியும்.
பேசும்,
கேட்கும் திறனை அருளும் ஸ்ரீ ஓசைநாயகி அம்பாளின் அற்புதங்களே இதற்குக்
காரணம். மருத்துவர்களால் கைவிடப்பட்ட, பேசும் மற்றும் கேட்கும் திறன்
குறைபாடுள்ள குழந்தைகளும் வயது வந்தவர்களும் அம்பாளின் அருளினால்
இத்திறன்கள் கைகூடப் பெற்றுள்ளனர்.
Arulmigu Annai Sri Osai Nayagi, Source |
பேச்சுத்
திறன் வராத குழந்தைகளை இங்குள்ள ஸ்ரீ ஓசைநாயகி அம்பாளின் சன்னதிக்கு
அழைத்து வந்து, வாக்வாதினி அர்ச்சனை மேற்கொள்கிறார்கள். அப்போது
அம்பாளுக்கு அர்ச்சிக்கப்படும் நெய்வேத்யத்தை குழந்தைகளுக்கு காலை உணவாக
தருகின்றனர். மேலும், அம்பாளின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட தேனை,
45 நாட்களுக்கு குழந்தைகளுக்கு கொடுத்துவர, திறன்குறைபாடுள்ள எத்தகையோரும்
பேசும் திறனை பெறுகின்றனர்.
கேட்கும்
திறனும், பார்வைத் திறனையும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அம்பாள்
அருள்வதை உள்ளூர் மக்களும், அப்பகுதி வியாபாரிகளும் விவரிப்பதை கேட்க
முடியும். எனவே, திறன்குறைபாடுள்ள குழந்தைகளை இக்கோயிலுக்கு அழைத்துச்
சென்று அம்பாளின் அருளைப் பெற வேண்டுகிறேன். அம்பாளின் சக்தியை அறிந்த
அன்பர்களும், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இச்செய்தியை தெரிவித்து
குழந்தைகளின் திறன் வளர்க்க உதவுமாறும் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
Other Links:
- Thirutalammudayair temple blogspot (Temple address and telephone number included)
- Dinamalar Article on Thirukolakka Temple
- Vandeguruparamparaam blogspot article on this temple
- Prtraveller blogspot article on Oosai Nayagi Amman (Temple Gurukkal phone number included)
- Elakumana blogspot article on Oosai Nayagi Amman
Om Guruve Nahama....
நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்