Thursday, March 23, 2017

Shiva, the Mother

சுடுகாட்டில் சிவன் ஏன் ??? மாபெரும் கருணையை உணரவேண்டி !!!!

 நமசிவாய


சிவன் சுடுகாட்டில் ஆடும் சாமி!!! என்று இன்று பலர் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி??? மெய் உணராமல் இருப்பவர்கள், மெய் உணரவேண்டி ஈசன் திருவருளால் இப்பதிவு.

மெய் உணர்ந்து, மெய்யை பற்றி இன்புறும் அடியார்கள் பாதம் பணிகிறேன்,
சுடுகாடு :
உயிராகிய மெய், இருந்த கூடுஆகிய உடலை விட்டு பிரிந்த பின், கூடுஆகிய உடலை ( பயனற்ற கூட்டை ) நெருப்பு கொண்டு எரிக்கும் இடம்.

சுடுகாட்டில் உயிரின் நிலை :
உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம், உயிர்யற்ற உடல் பிணம் ( சவம் ), 50 – 60 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும்போது, தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் பரிதவிக்கும், ( 1 ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு பிரியும்போது ஏற்படும் உணர்வு போல - 50 – 60 ஆண்டு காலம் இருந்த கூடு )
தமக்கு என்றும் நிரந்தரம் நினைத்து பேணி காத்த உறவுகள் அனைத்தும் உடலை எரித்துவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிட்டனர், இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமது இல்லை என்று மெய்யை உணர்ந்து பரிதவிக்கும் போது.

சுடுகாட்டில் சிவம் :
உயிர் பரிதவிக்கும் போது மாபெரும் கருணையாளன் நம்பெரும் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அபயம் அளிக்கிறார்,

இதை உணர்த்தவே அப்பர் பெருமான் “ திருஅங்கமாலை “ தேவாரத்தில்
"உற்றார் ஆருளரோ - உயிர் கொண்டு போகும்பொழுது குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ." மிக தெளிவாக கூறியுள்ளார்.

யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்ப்பட்டு பரிதவிக்கும் நேரத்தில் கருணையுடன் அடைக்கலம் தந்து அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று கூறுவது எவ்வளவு சிறுமை !!! என்று உணருங்கள் .

சுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை, அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன், நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெருமும் கருணையோடு காக்கிறான் என்று உணர்த்தவே, ஈசன் திருவருளால் இப்பதிவு.

உய்வு பெறவேண்டிய உயிர்கள் உய்யும் பொருட்டு


Arulmigu Anandathandva Natarajar, (Thillai Vanam) Chidambaram. Image Source


திருச்சிற்றம்பலம்


Om Guruve Namaha....


தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்