கெடு பலன் நீக்கும் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்!
காவிரி நதியை ஒட்டி அமைந்துள்ள நவக்கிரக பரிகார ஸ்தலங்கள்
எண்ணிலடங்காதவை. அவற்றில் காவிரியின் தென்கரையில் திருத்துறைப்பூண்டி அருகே
அமைந்துள்ள திருக்கொள்ளிக்காடு சனி பகவானின் ஸ்தலம் ஆகும்.
Amma arulmigu Sri Mirthupadanayagi udanurai Appan arulmigu Sri Agneeshwarar, Image Source |
பஞ்சினும் மெல்லடியாள் உடனுறை அக்னீஸ்வரர் அருள்பாலிக்கும்
இந்த தலத்துக்கு அக்னிபுரி என்ற பெயரும் உண்டு. இங்கு அக்னி பகவான் சிவபூஜை
மேற்கொண்டதால் இத்தகைய பெயர் வந்தது. இக்கோயிலில் தனி சன்னதியில் சேவை
சாதிக்கிறார் பொங்கு சனீஸ்வரர்.
சனியின் சிறப்பு
நவ கிரகங்களிலேயே ஈஸ்வரர் பட்டம் பெற்றவர் சனி பகவான்
ஒருவர்தான். மந்தன் எனவும் மந்தகாரகன் எனவும் அறியப்படுகிறார் சனி.
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சனி பகவானுக்கு, "நவ கோள்களில்
முக்கியத்துவம் மிகுந்த இடத்தையும், கர்மவினைகளுக்கு ஏற்ப தண்டனை அளிக்கும்
பணியையும்" அருள்கிறார் ஈஸ்வரன்.
மனிதர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, விருப்பு
வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தண்டனைகளையும் பலன்களையும் அளிக்கத்
தொடங்குகிறார் சனி பகவான். மனிதர்களின் மனம் என்று தண்டனைகளை ஏற்றுக்
கொண்டுள்ளது. அப்படியே ஏற்றாலும் செய்த பாவங்களை மனதில் நினைத்து
செய்தவற்றுக்காக வருந்துபவர்கள் யார் இருக்கிறார்.
எனினும், சனி பகவான் தன் பணியை தீவிரமாக தொடர்ந்ததால் அவர்
மீது பெரும் அச்சம் ஏற்படுகிறது. அவரது கடும் தண்டனையால் நவ கோள்களில்
அஞ்சத் தகுந்தவராகவும், "சனி ஒரு தோஷம்" என்ற பெயரும் அவருக்குக்
கிடைக்கிறது.
Sri Sani Bhagavan's Siva Pooja at Agni Vanam, Image Source |
இதனால் வேதனையுற்ற சனி பகவான், தாமும் மற்ற கோள்களைப் போல்
அருள்பாலிக்கவும், கேட்ட வரங்களைத் தருபவராகவும் மாற விரும்பி ஈஸ்வரனை
நோக்கி இத்தலத்தில் (அக்னிவனம்) தவம் மேற்கொண்டார். அதன்மூலம் ஈஸ்வரர்
பட்டமும் பெறுகிறார்.
Amma arulmigu Sri Mahalakshmi, arulmigu Sri Pongu Sani Bhagavan, Agni Vanam, Image Source |
அதன் மூலம் அவரிடம் இருந்து தண்டனை அளிக்கும் ஆயுதங்கள்
மறைந்து அன்பை பரப்பும் ஏர் கலப்பை கிடைக்கிறது. அருகே மகா லட்சுமியும்
அமர்கிறார். நேர் எதிரே அவரது குருவான பைரவரும் அமைந்துள்ளார். (குரு
பார்க்க கோடி நன்மை எனும் விதியின் அடிப்படையில்).
Arulmigu Guru Sri Bairavar, Thirukollikadu, Image Source |
இதன்மூலம் பொங்கு சனீஸ்வரராக மாறி, சனி தசை, சனி புத்தி,
அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி போன்ற காலங்களில் மனிதர்களின் கெடு பலன்களை
குறைத்து நற்பலன்களை பரப்புகிறார். இங்குள்ள பொங்கு சனீஸ்வரரையும்,
பைரவரையும் ஒரே நேரத்தில் குடும்பத்துடன் வழிபடுவது சிறப்புக்குரியதாகும்.
அதன்மூலம் கூடினார்க்கு சனியின் கேடில்லை என்ற நிலை கிடைக்கிறது.
ஜனனகால ஜாதகத்தில் சனியால் பாதிக்கப்பட்டவர்கள், சனி தசை
அல்லது புத்தி நடப்பவர்கள், கோட்சாரப்படி அஷ்டம சனி உள்ளவர்கள் (தற்போது 2017ல் மேஷ ராசியினரும், 2017 செப்டம்பருக்கு பிறகு ரிஷப ராசியினரும்) சனி கோளின்
ஆதிக்கத்தில் உள்ள அனைவரும், இந்த ஸ்தலத்தில் பொங்கு சனீஸ்வரரை வழிபட்டு
எள் தீபம் ஏற்றுவதும், எள் உருண்டைகளை தானமிடுவதும் மிக மிக சக்தி வாய்ந்த,
மிக அவசியமான பரிகாரமாகும்.
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரரை வழிபட்டு கெடு பலன்
நீங்கி, பாதிப்பு குறைந்த பல அன்பர்கள் அதை நேரில் வந்து சிலாகித்து
தெரிவித்துள்ளனர். எனவே, அன்பர்கள் அனைவரும் இத்தலத்துக்கு ஒருமுறையேனும்
சென்று சனி தீர்த்தத்தில் கால் நனைத்து, சனி பகவானை வழிபட்டு பலனடைய
வேண்டுகிறேன்.
முகவரி:
அக்னீஸ்வரர் திருக்கோயில்
திருக்கொள்ளிக்காடு போஸ்ட் - 610 205
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம்
04369 - 237454
04366 - 325801
Other ineresting weblinks:
- Official Temple website
- Dinamalar's article on Thirukollilkadu temple
- A detailed article from agasthiar.org
Om Guruve Namaha...
நேசத்துடன்