Thursday, June 29, 2017

Nemam Arulmigu Thiru Aavundeeswarar undanurai Amirthambigai Amman

மிருத்யு தோஷ, மரண தோஷ நிவர்த்திக்கு உதவும்

நேமம் திருத்தல தர்ப்பணம்

 

ரண காயங்கள், கடும் உடல் ரோகங்களால் அவதிப்பட்டு இயற்கை ஏய்துவது கூட ஒரு துர்மரணமே ஆகும். தீவினைகளைத் தவிர்த்து துர்மரண தோஷத்தில் இருந்து விடுபட்டு வலியின்றி இறைவனிடி சேர நேமம், அமிர்தாம்பிகை-ஆவுண்டீஸ்வரர் ஸ்தல தரிசனம் அவசியமான பரிகாரமாகிறது. தீரா நோயால் அவதிப்படுபவர்களின் ரத்த உறவுகள் இத்தலத்துக்கு நேரில் சென்று வழிபட, ஜெனனகால ஜாதகம் அனுமதித்தால் நோய் நிவர்த்தி கைகூடும். அதே நேரம், இறைவனின் சங்கல்பம் வேறுவகையில் இருந்தால் வலியின்றி இறைவனடி சேர வழிபிறக்கும்.

 ஸ்ரீ ஆவுண்டீஸ்வரர் உடனுரை ஸ்ரீ அமிர்தாம்பிகை திருக்கோயில்

 
Appan Arulmigu Sri Aavundeeshwarar, Image source


சென்னை அடுத்துள்ள திருமழிசையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் நேமம் என்னும் அழகிய கிராமம் உள்ளது. உள்ளே இறைவனையும் இறைவியையும் காணும்போது மெய்சிலிர்க்கிறது. ஊரின் ஈசானிய மூலையில் சிவன் கோயில் அமைந்திருப்பது அரிய அம்சமாகும்.

மாடு மேய்க்கும் சிறுவனின் பசுக்களில் ஓன்று லிங்க வடிவத்தின் மீது பால் கரப்பதை அறியாத சிறுவன், சாட்டையால் பசுவை அடிக்க, அந்த அடியை இறைவன் தாங்கிக் கொண்டு பசுவிற்க்கும், சிறுவனுக்கும் காட்சி தந்தான் என்பது ஐதீகம் அந்த அடையாளம் இன்னும் சிவன் மீது காணப்படுகிறது.

Ammal Arulmigu Sri Amirthaambigai, Image source
நவராத்தி, வெள்ளி, பூர நட்சத்திர நாட்களில் வளையல்கள் இட்டு வழிபட வேண்டிய தேவி! குங்குமப்பூவால் அர்ச்சித்திட நற்காரிய சத்திகளை அளிக்கும் அம்பிகை!

அமாவாசையில் பித்ரு லோகத்தார் யாவரும் வந்து வழிபடும் ஆலயம்! நவராத்திரி நாயகியாகப் போற்றபடும் தேவி.

நேமம் ஸ்ரீ அமிர்தாம்பிகை சமேத ஸ்ரீ ஆவுண்டூ ஸ்வரர் திருக்கோயில் பல கோடி யுகங்களாக இப்பூவுலகைத் தாங்கும் அஷ்டதிக்குப் பாலகர்களும், நேமம் திருக்குளத் திர்த்தத்தில் நீராடித் தம் களைப்பை இமைப்பொழுதில் போக்கிக் கொள்ள உதவும் ஒளஷதத் தீர்த்தத் தலமாக, பிணி தீர்க்கும் அருட்பெரும் ஆலய பூமியாக, நேமம் ஸ்ரீ அமிர்தாம்பிகை சமேத ஸ்ரீ ஆவுண்டீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது.

இறைவன் இறைவியைத் தவிர பால விநாயகர், தட்சணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், சிவவிஷ்ணு துர்க்கை, வள்ளி தெய்வானை உடன் முருகப் பெருமான், வரசித்தி விநாயகர், பைரவர், காசி விஸ்வவநாதர், விசாலாட்சி, நந்தீஸ்வரர் பல பீடம் என அனைத்தும் ஓருங்கே அமைந்துள்ளன.

இங்குள்ள சிவாலயம் புண்ணியத் தலம் என்று குறிப்பிடப்படுகிறது. அக்காலத்தில் பைரவர் சந்நிதியை முதன்மையாகக் கொண்டு ஆலயம் அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். பெண்களாய் பிறந்த ஒவ்வொருவரும் இங்குள்ள அமிர்தாம்பிகை அம்பிகையை வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய புண்ணியஸ்தலம்.
Arulmigu Sri Amudha Yogeeshwara Bhairava, Image source

வழித்தடம்

 

திருவள்ளூர்-பூவிருந்தவல்லி மார்க்கத்தில், பூவிருந்தவல்லியில் இருந்து 10 கி.மீ., நேமம் கூட்டு சாலையில் இருந்து 1.5 கி.மீட்டரில் திருத்தலம் அமைந்துள்ளது.

தொடர்பு: எம்.குமார் - (+91) 98407 70248.


Interesting internet links with pictures:

 Om Guruve Namaha...
 
நேசத்துடன்

குபேரன் ஜோதிடர்