திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வர சொரூபம்
Arulmigu Appan Sri Mahalingaeshwarar, Image source |
சிவரூபங்களில் மகாலிங்கேஸ்வர சொரூபம் மிக மிக மகத்துவம் வாய்ந்தது. சிவத்துவத்தின் பரிபூரணமும் இதில் அடங்கிவிடும் என்பது ஐதீகம்.
முன்ஜென்மம், பின்ஜென்மம் என்று அனைத்து நிலை பிறப்புகளிலும் சாபல்ய யோகம் பெற மகாலிங்கேஸ்வரரையே அக்காலத்தில் மக்களும் மன்னர்களும் வணங்கினர்.
Arulmigu Sri Amma Perumulaiyal, Image source |
இத்தகைய சிறப்பு வாய்ந்த மகாலிங்கேஸ்வர பெருமான்
திருவிடைமருதூர், சதுரகிரி, ஸ்ரீசைலம் (ஆந்திரா) ஆகிய இடங்களில் மட்டுமே
காட்சியளிக்கிறார்.
இவற்றில் பாமரர்கள் செல்வதற்கும் வணங்குவதற்கும் எளிமையான ஸ்தலம் திருவிடைமருதூராகும்.
இவற்றில் பாமரர்கள் செல்வதற்கும் வணங்குவதற்கும் எளிமையான ஸ்தலம் திருவிடைமருதூராகும்.
ஊழ்வினை தோஷம் (பிரம்மகத்தி தோஷம்), கோ தோஷம், பஞ்சபட்சி
தோஷம், உயிர்பலி தோஷம், பெண் சாபம், பித்ரு சாபம், சத்ரு சாபம் என அனைத்து
வகையான பீடைகளும் அகல திருவிடைமருதூர் பெருமானை வணங்குவது மிக எளிய ஆனால்
சக்தி வாய்ந்த பரிகாரமாகும்.
நன்னம்பிக்கையை மனதில் வைத்து திருவிடைமருதூர் சென்றால்
மேற்கண்ட அனைத்து வகையான தோஷங்களும் நீங்குவதோடு, ஜாதகரீதியில் ஏற்பட்டு
வரும் எல்லா வகையான திருமணத் தடைகளும் அகலும் என்பது ஊர்ஜிதமான
உண்மையாகும்.
ஆதலால்தான், திருமணத் தடை நீங்க, மழலை ஒலி கேட்க திருவிடைமருதூரையே முற்றும்முதலுமான பரிகாரமாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.
திருவிடைமருதூருக்கு செல்வதில் உரிய முறைமைகளை பின்பற்றுதலும்
அவசியமானதாகும். இதை புனிதப் பயணமாக மனதில் நிறுத்தி, புலால் உண்பதை
தவிர்த்து பயணம் மேற்கொள்ள வேண்டியது மகிவும் அவசியம்.
Karuniga Theertham, Image source |
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வர ஸ்தலத்தின் கிழக்கு வாசலில்
உள்ளே சென்றவுடன், கருநிகா தீர்த்தத்தில் குளித்துவிட்டு, விநாயகரை
வணங்கிவிட்டு, நந்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.
பிறகு, சிவன், அம்பாள், மூகாம்பிகை ஆகிய மூவருக்கும் சங்கல்ப
பூஜை செய்து, மனதார வேண்டிவிட்டு, மேற்கு வாசல் வழியாக வெளியேற வேண்டும்.
(கிழக்கு வாயில் வழியாக வரும்போது, லிங்கேஸ்வரனை கண்டு ஒதுங்கி நிற்கும்
ஊழ்வினைகள், மேற்கு வாசல் வழியாக வெளியேறும்போது நம்மை நிரந்தரமாய்
பிரிந்துவிடும் என்பது ஐதீகம்) மனச்சுத்தியோடும், உடல்சுத்தியோடும் இப்பரிகாரத்தை
மேற்கொண்டால், மணத்தடைகள், மகப்பேறு தடைகள், உடல்ரோகங்கள், மனபலகீனங்கள்,
சத்ரு அச்சங்கள், வழக்கு விவகாரங்கள், மணவாழ்வில் நெருடல்கள் என அனைத்தும்
நீங்கப்பெறலாம்.
Other interesting links
- Vaananba article on Thiruvidaimaruthur Temple
- Dinamalar article on Sri Mahalingaeshwarar Temple
- Wikipedia article on Thiruvidaimaruthur Temple
Om Guruve Namaha...
நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்
குபேரன் ஜோதிடர்