Pillayarpatti Karpaga Vinayagar |
- 'வி" என்றால் 'இதற்கு மேல் இல்லை" எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.
- கணபதி எனும் சொல்லில் 'க" என்பது ஞானத்தைக் குறிக்கிறது. 'ண" என்பது ஜீவர்களின் மோட்சத்தைக் குறிக்கிறது. 'பதி" என்னும் பதம் தலைவன் எனப் பொருள் படுகிறது.
- தந்தையைப் போல் பிள்ளை, தாயைப் போல பிள்ளை என்பது தான் உலக வழக்கு. ஆனால், தன் தந்தை சிவபெருமானின் தோற்றத்தை விநாயகப்பெருமான் ஒத்திருப்பார். சிவபெருமானின் மற்றொரு வடிவமே விநாயகப்பெருமான் என்பர்.
- சிவபெருமானைப் போலவே விநாயகப்பெருமான் சிவந்த மேனியை உடையவர்.
- சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள் இருக்கும். இருவருக்கும் மூன்று கண்கள்.
- தலையில் இருவரும் மூன்றாம் பிறையணிந்திருப்பர்.
- தந்தையைப் போல இவரும் ஐந்தொழில்களைச் செய்வார்.
- இருவரும் நடனக்கோலத்தில் காட்சி தருவர்(நடராஜர், நர்த்தன கணபதி).
- பார்வதி, சிவனின் இடப்பாகத்தில் இருப்பது போல், வல்லபை விநாயகரின் இடப்பக்கம் இருப்பாள்.
விநாயகர் வடிவ விளக்கம்
யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம்
நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண்
தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண், பெண்
ஜீவராசிகள் அவருள் அடக்கம். பெரும் வயிறைக் கொண்டதால் பு+தர்களை
உள்ளடக்கியவர். அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம்.
Sri Gnana Ganapathy at home of Kuberan Astrologer |
முழுமுதற் கடவுளான யானை முகத்தோனை முறைப்படி வழிபட்டால் கைகூடாத செல்வங்களே இல்லை என்பர்.
நமது முன்னோர் அருளிச் சென்ற முறைகளை மனதில் கொண்டு, விநாயகர்
சதுர்த்தி தினத்தில் (13.09.2018 - வியாழக்கிழமை) கணபதியை வணங்கி
கீழ்காணும் இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்து பூஜித்தால் வேண்டிய செல்வம்
கிட்டும்.
- இளந்தை இலை – கல்வியில் மேன்மை
- ஊமத்தை இலை – பெருந்தன்மை
- வில்வம் இலை – நினைத்த காரியம் வெற்றி
- அருகம்புல் – 16 செல்வங்களும் கைகூடும்
- விஷ்ணுகிராந்தி – நுண் அறிவு
- மாதுளை இலை – புகழ் மற்றும் நற்பெயர்
- கண்டங்கத்திரி இலை – தைரியம்
- அரலி இலை – தடைநீக்கம்
- நாயுருவி இலை – முகப்பொலிவு
- வன்னி இலை – இப்பிறவியில் அனைத்தும் கிட்டும்
- முல்லம் இலை – அறம்
- அரசு இலை – பதவி
- அகத்தி கீரை – கடன் நிவர்த்தி
- தாழம் பூ இலை – பொருளாதார மேன்மை
- கரிசலாங்கன்னி – இல்வாழ்வில் மேன்மை
- தவனம் – தம்பதி ஒற்றுமை (ரஜிபொருத்தம்)
- மரிக்கொழுந்து – தாம்பத்யம் (யோனி பொருத்தம்)
- தேவதாரு இலை – மனவலிமை, தைரியம்
- ஜாதி மல்லி இலை – வீடு, மனை, பூமி லாபம், பூர்வீக சொத்து
- மருதம் இலை – புத்திர பாக்கியம்
- எருக்கு இலை – கருவில் இருக்கும் சிசுவை பாதுகாக்க
அன்பர்கள் அனைவரும், முன்னோர் வகுத்த முறைப்படி பிள்ளையாரை வணங்கி சகல சௌபாக்கியங்களும் பெற பிரார்த்திக்கிறேன்...
Om Guruve Namaha...
நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்