சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் அலைகள் நமது மனதிற்க்கு கிடைக்காத பலவீனமான நாள் என பொருள்படும்.
நமது ஜென்மத்தில் அமையும் சந்திரனின் இடத்தில் இருந்து
எட்டாவது இராசியில் (அஷ்டமம்) சந்திரன் வரும்போது நமக்கு சந்திரனின்
கதிர்கள் கிடைப்பது மிகவும் குறைவாகவோ அல்லது சந்திரனின் நிலையினை
அனுசரித்து இல்லாமலோ கூட போகிறது.
அஷ்டமம் எனும் மறைவிடத்தில் சந்திரன் வரும்போது, அந்த
அமைப்பு, சந்திரனின் கதிர்கள் இன்னும் கூட துல்லியமாக நமக்கு கிடைப்பதனை
தடை செய்யும் அமைப்பாக உள்ளது. குறிப்பாக, நமது ஜென்ம நட்சத்திரத்தில்
இருந்து பதினேழாவது நட்சத்திரமே மிகவும் பலவீனமான நட்சத்திரமாகும்... இந்த
நட்சத்திரத்தை சந்திரன் கடக்கும்போது சந்திராஷ்டமம் உச்சத்தில் இருக்கும்.
இத்தகைய நாட்களில் நாம் எடுக்கும் புதிய கருத்துக்கள் மற்றும்
முடிவுகளை சில நாள்கள் கழித்து எண்ணும்போது நாம் வருத்தப்படும்படி மாறுவதை
உணர்வோம். ஆகவே சந்திராஷ்டம தினத்தில் வாழ்வியல் முடிவுகள் எடுப்பதை
தவிர்ப்போம்.
இந்த உண்மையை அறிந்து கொண்டால் சந்திராஷ்டமத்தைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை.
எனினும், நமது பலவீனமே பலத்தை காட்டும் முகக்கண்ணாடியாக
அமையும். ஆகையால், இத்தகைய சந்திராஷ்டம தினத்தில் எதைச் செய்யக்கூடாது
என்பதை அறிந்த நாம், இனி என்ன செய்யலாம் என்பதை அடுத்த பதிவில் அறிவோம்...
குபேரன் ஜோதிடர்
லஷ்மி குபேரன் ஜோதிட ஆராய்ச்சி மையம்