வடமொழியில் தாமோ என்றால் கயிறு. உதரம் என்றால் வயிறு. ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்களை சகோதரர்கள் (சகோ+உதரம்) என்று அழைப்பர்.
இங்கு, குழந்தை பாலகனாய் தவழ்ந்த பெருமாள்,
குழந்தைத்தனத்துக்கே உரிய குறும்புத்தனங்களை செய்ததால், அவரது தாய்
பெருமாளின் வயிற்றில் கயிற்றை கட்டி ஓரிடத்தில் அமரவைத்தாராம்.
ஸ்ரீ அமிர்தவல்லி நாயகா சமேத ஸ்ரீ சௌமிய தாமோதர பெருமாள் Temple link
|
அச்சமயம் பார்த்து உறவினர்கள் வீட்டுக்கு வர, பாலகனை
கயிற்றில் கட்டி வைத்ததை அவர்கள் எவ்வாறு கருதுவார்களோ என பதறினாராம் தாய்.
இதையறிந்த பெருமாள், அக்கயிறை, பூக்கயிறாய் மாற்றி தாயின் மனத்தாங்கலை
போக்கினார்.
இதனால் பெரும் மகிழ்வுற்ற தாய், அன்பு, அறிவு, அழகும் கொண்டு தனித்திறனுடன் மிளிர்வாய் என பெருமாளை ஆசிர்வதிக்கிறார்.
இத்திருத்தலத்துக்கு வந்து பெருமாளை சேவிக்கும் அனைத்து
குழந்தைகளுக்கும் அவ்வண்ணமே அன்பும், அறிவும், அழகும், தனித்திறன்களும்
கைகூடும் வகையில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
குழந்தைபேறை எதிர்நோக்கி காத்திருக்கும் மகளிரும்,
கருவுற்றிருக்கும் தாய்மார்களும் இங்கு வந்த சௌமிய தாமோதர பெருமாளை
சேவித்தால் அத்தகைய சிறப்பும், ஆயகலைகளில் தனித்திறனும் பொருந்திய குழந்தை
பிறக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் வேண்டிய அருட்கடாட்சத்தை
அருளும் பரிகாரஸ்தலமாக சௌமிய தாமோதர பெருமாள் திருக்கோயில் விளங்குகிறது.
நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்
குபேரன் ஜோதிடர்