Monday, September 12, 2016

Pithru Tharpanam on Mahalaya Amavasya

நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும்.
ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.



கடக்க முடியாத காட்டாற்று வெள்ளத்திலும் கிடைக்கும் மரக்கலன்போல பித்ருக்களின் ஆசி அமையும். 

எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக்கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் கவசத்துக்கு ஒப்பாகும்.
வரும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 16-ம் தேதி பிரதமை திதியில் இருந்தே பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளிக்கத் தொடங்கலாம்.
ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது. (யஜூர் வேத ஆபஸ்தம்ப தர்ப்பணம்)

பிரதமை - செல்வம் பெருகும் (தனலாபம்)
துவிதியை - வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)
திருதியை - திருப்திகரமான இல்வாழ்க்கை (வரன்) அமையும்
சதுர்த்தி - பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)
பஞ்சமி - விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)
சஷ்டி - தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)
சப்தமி - மேலுலகோர் ஆசி
அஷ்டமி - நல்லறிவு வளரும்
நவமி - ஏழு பிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை
தசமி - தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்
ஏகாதசி - வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்
துவாதசி - தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்
திரியோதசி - நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்
சதுர்த்தசி - முழுமையான இல்லறம் (கணவன் மனைவி ஒற்றுமை)
அன்பர்கள் அனைவரும் பித்ருக்களை பூஜித்து பிறவிக் கடலில் துன்பமின்றி பயணிக்க வேண்டுகின்றேன்.

மஹாளய அமாவாசை


எமதர்மராஜன் சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம்.

நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாள்ய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை.

இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

எந்த திதியில் என்ன பலன்


மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.

  • முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
  • இரண்டாம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
  • மூன்றாம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
  • நான்காம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
  • ஐந்தாம் நாள் - பஞ்சமி - செல்வம் சேரும் நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
  • ஆறாம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
  • ஏழாம் நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
  • எட்டாம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
  • ஒன்பதாம் நாள் நவமி - திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.
  • பத்தாம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
  • பதினொன்றாம் நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
  • பன்னிரெண்டாம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
  • பதின்மூன்றாம் நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
  • பதினான்காம் நாள் - சதுர்த்தசி - ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
  • பதினைந்தாம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.
மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.

Om Guruve Namaha...


நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்