Thursday, January 19, 2017

SirKazhi Sattainatha Swamy Temple

சனி பார்வையிலும் ஏற்றம் பெற சீர்காழி சட்டநாத ஸ்வாமி வழிபாடு!



மந்தகாரகனான சனி பகவான் ஜாதகத்தின் ஒரு கட்டத்தைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். 12 கட்டங்களைக் கடக்க 30 ஆண்டுகள் ஆகின்றன. 
எனவேதான், 30 ஆண்டுகள் வாழ்ந்தவனும் இல்லை, 30 ஆண்டுகள் வீழ்ந்தவனும் இல்லை என்பர்.

அவ்வகையில் ஒவ்வொரு ஜாதகரும் வாழ்வின் ஏதேனும் ஒரு கட்டத்தில் அஷ்டம சனியை (ராசிக்கு 8-ம் இடத்தில் சனி சஞ்சரிப்பது) எதிர்கொண்டே தீர வேண்டும். அவமானம், நம்பிக்கை துரோகம், உடல்நிலை சீர்கேடு, தீராத நோய், பில்லி சூனியம் ஏவல், மரணம், பஞ்சமா பாதகம் என எல்லா வகையான துர்பலன்களும் அஷ்ட சனி சஞ்சாரத்தின்போது ஏற்படும். 

ஜனன கால ஜாதகத்தில் சனியின் நிலையைக் கொண்டு இதன் தீவிரம் மாறுபடும். எனவேதான் அஷ்டம சனியின்போது ஒவ்வொரு ஜாதகரும் தன்னை பாதுகாத்துக் கொள்ள திருத்தலங்களுக்கு செல்வதோடு, எளிய பரிகாரங்களை மேற்கொள்ள முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர். அவ்வகையில், அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஏழரைச் சனி, ஜென்ம சனி, துர்பலன்களை நல்கும் சனி தசை அல்லது புத்தி என சனியின் பார்வை நீளும் இடங்களுக்கெல்லாம் ஒட்டு மொத்த பரிகாரமாக சொல்லப்படுவதுதான் சீர்காழி சட்டநாத ஸ்வாமி வழிபாடு.

Sri Brahmapurieshwarar
Ammaiyar Thirunilai Nayagi

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைதோறும், நடுநிசி ஒரு மணிக்கு இங்கு நடைபெறும் பைரவர் பூஜை, அஷ்டம சனியின் தாக்கத்தை தடுத்து நிறுத்தும் கவசமாக முன்னோர்களால் அருளப்பட்டது. (பூவுலகின் ரிஷிமூலமாக விளங்கும் ஆதிசிவனை நடுநிசியில் வழிபடுவது எம பயத்தை போக்கும் என்பதை நமது ரிஷிகள் பல்லாண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர். குறிப்பாக, ஆதிசங்கரருக்கு முந்தைய காலங்களில், அகோரிகள் சுடுகாட்டில் பைரவரை வழிபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.) 

இரவு பத்து மணியளவில் சட்டநாத ஸ்வாமி வழிபாட்டில் இருந்து தொடங்கும் பூஜை, பலிபீட பூஜை, கோயில் கோபுரத்தில் வீற்றிருக்கும் சிவ-பார்வதி பூஜை, ஆகாய சட்டநாதருக்கு நடைபெறும் விபூதி (புணுகு) பூஜை என நீள்கிறது. நடுநிசி ஒரு மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடு இதன் உச்சகட்டமாக அமைகிறது. 

போட்டி, பொறாமை, கண்திருஷ்டி, சட்ட சிக்கல்கள், உடல் நல பிரச்சினைகள், தீராத நோய்க்கு மருத்துவ சிகிச்சை, பகைவர் எதிர்ப்பு, மரண பயம், ஏவல் என எல்லா வகையான துர்வாசத்துக்கும் முடிவு கட்டுவதாக இந்த பூஜை அமைகிறது.

காழியில் பாதி காசி


சீர்காழி சட்டநாத ஸ்வாமியை பிரம்மன் வழிபட்டதால் பிரம்மபுரம் என்றும், மூங்கில் வடிவமாக இறைவன் தோன்றியதால் வேணுபுரம் எனவும், தலை பிளவுபட்ட இராகு பூஜித்தமையால் சிரபுரம் என்றும் இத்திருத்தலம் அழைக்கப்படுகிறது.

Sri Asthanaga Bairvar Temple

Sri Moolvar Sattainathar
அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷன பைரவர், சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களும் ஓரிடத்தில் நின்று சேவை சாதிப்பதால், (சீர்)காழியில் பாதி காசி என கூறப்படுவதுண்டு.

 
Thirugnanasambanda Peruman'in Padhigam on SirKazhi Appan and Ammai
Youtube source beauitfully rendered by Thiru Venkatesan Othurvar

தற்போது (2014 - 2017) அஷ்டம சனியை எதிர்கொள்ளும் மேஷ ராசி அன்பர்கள் உட்பட எண்ணற்ற அன்பர்கள் மேற்கண்ட பூஜையில் பங்கேற்று கெடுபலன் தாக்கம் நீங்கப்பெற்றதை நேரில் அறிந்திருக்கிறேன். அவ்வகையில் அனைத்து அன்பர்களும் இந்த எளிய பரிகாரத்தை மேற்கொண்டு பைரவ அருளைப் பெற வேண்டுகிறேன்.



நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்