Thursday, January 26, 2017

A conversation on "Karma" between Appan Shivan and Amma Parvathi

கர்ம வினை பற்றி பார்வதி தேவிக்கு ஈசன் அளித்த விளக்கம்

அன்பர்களே இந்த கதையை  இரண்டு மூன்று முறை படித்து பலன் பெறுங்கள்

அடர்ந்த காட்டில் ஓரு ஆண்மானும், ஒரு பெண் மானும் இரண்டு குட்டிகளுன் விளையாடி கொண்டிருந்தன. அங்கு வேட்டையாட வேடன் ஓருவன் ஆண் மானையும் , பெண் மானையும் அம்பெய்து கொன்று இரண்டு மான்களையும் தூக்கி கொண்டு இல்லம் சென்றான்.

ஆனால் தாய் தந்தையரை காணாமல் குட்டி மான்கள் தவித்து போயின உணவு கிடைக்காமல் பசியால் வாடி தவித்தன. இதை கண்ட மிருகண்டு மகிரிஷியின் சீடர்கள் மனம் வெதும்பி இந்த சம்பவம் பற்றி முனிவரிடம் கூறினார்கள். மிருகண்டு மகிரிஷி சிவபெருமானையும் பார்வதியும் பிரார்த்து அபயம் அளிக்குமாறு வேண்டினார். சிவபெருமான் அவருடைய குரலை கேட்டும் கேட்காதது போல இருந்தார்.

பார்வதி தேவி ஈசனை நோக்கி  சுவாமி நாம் வசிக்கும் இந்த வனத்தில் இரண்டு மான் குட்டிகள் துன்ப படுகின்றன தாங்கள் அவைகளை காப்பாற்ற வேண்டும் என்றாள்.

சிவ பெருமான் தேவி உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் தன் கர்ம வினையை அனுபவித்தே தீர வேண்டும். இந்த மான் குட்டிகளின் தாய் தந்தையர் முன்பு மானிடராய் பிறந்வர்கள், தங்கள் வீட்டு கன்று குட்டியை அவழத்து விட்டு அது பால் குடிக்கும் முன்பே பசுவின் மடியிலிருந்து எல்லா பாலையும் கறந்து விடுவார்கள்.பசுவிற்க்கும் சரியான உணவு கொடுத்ததில்லை. மாடு மேய்க்கும் இடையனுக்கும் சரியான கூலி கொடுக்கவில்லை. அந்த பாவம்தான் அந்த இருவரும் இங்கு மான்களாய் பிறந்துள்ளனர். வேடனாக வந்து மான்களை வேட்டையாடியவன் முற் பிறவியில் இவர்களிடம் இடையனாக இருந்தவன் தன் கூலியின் நிமித்தம் இந்த மான்களை வேட்டையாடி உணவாக்கி கொண்டான் என்றார் இறைவன்.

Madurai, Arulmigu Amman Sri Meenashi, Arulmigu Appa Sundareshwarar (Image Source)

பார்வதி, சுவாமி இந்த இடையன் ஏன் வேடனாக பிறந்தான் என்று சந்தேகமாக கேட்டாள். 

பசுக்களை மேய்க்கும் போது அவைகளை அடித்து துன்புறுத்தியதால் வேடனாக பிறந்தான் என்றார் இறைவன்.

ஆனால் இந்த புனித வனத்தில் பிறப்பதற்க்கு புண்ணியம் செய்திருக்க வேண்டுமே இவர்கள் பாவமல்லவா செய்திருக்கிறார்கள் என்றாள் தேவி.
இறைவன், உண்மைதான் தேவி எனது சிறந்த பக்தனான உக்ரதபஸ் ஒரு முறை யாத்திரையாய் இங்கு வந்து தங்கினார். என்னை பூஜிக்க அவருக்கு மலர கிடைக்கவில்லை. உடனே போன பிறவியில் சிறுவர்களாக இருந்த மான் குட்டிகளிடம பூஜைக்கு மலர வேண்டும் என கேட்டார் அந்த சிறுவர்களும் தூய்மையானவர்களாக மாறி தொலைவில் உள்ள தோட்டத்திலிருந்து மலர்கைளை பறித்து அதை தாமரை இலையில் வைத்து உக்ரதபஸிடம் கொடுத்தனர். அவருக்கு ஏற்பட்டமகிழ்வுக்கு அளவே இல்லை. அந்த மலர்களால் என்னை பூஜத்து மகிழ்ந்தார். என்னை புஜித்த பக்தனுக்கு மலர் கொடுத்தால் இந்த சிறுவர்கள் பாவம் கரைந்து போய் இங்கு மான் குட்டிகளாய் பிறந்தன என்றார்.

பிள்ளைகளை பற்றி சொன்னீர்கள் அவர்களுடைய தாய் தந்தையர்கள் பாவிகள்தானே அவர்கள் எவ்வாறு இங்கு பிறக்க அருள் புரிந்தீர்கள் என்று கேட்டாள் பார்வதி.

பிள்ளைகள் செய்த புண்ணியம் அவர்களை பெற்றவர்களுக்கும் நற் பயனை தரும்.  அவர்களுது பிள்ளைகள் செய்த புண்ணியத்தால் அவர்களது தாய் தந்தை இங்கு பிறந்தனர் என்றார் இறைவன்.
Arulmigu Appan Sri Thayumanavar, Ammai Sri Mattuvar Kuzhalammai - Thrichy, Tamilnadu. (Image Source)

பின்னர் சிவ பெருமானும் பார்வதியும் மான் உருவம் கொண்டு மான் குட்டிகளிடம் சென்று மான் குட்டிகளுக்கு பால் கொடுத்து "அபயம்" அளித்தனர்
இந்த திருவிளையாடல் அரங்கேறிய இடம் திருமாந்துறை தலம் தேவாரம் பாடல் பெற்ற  தலம். 

🌷🙏ஓம் நமசிவாய

தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்