இதயம் காக்கும் இருதயாலீஸ்வரர்
பூசலார் எனும் சிவபக்தர் சிவனுக்கு கோயில் கட்ட நினைத்தார்.
ஆனால் யாரும் உதவ முன்வராததால் அவரால் கோயில் கட்ட முடியவில்லை.
எனவே
இலுப்பை மரத்தடியில் தியானத்தில் அமர்ந்து, மனதில் கற்பனையாய் ஒரு கோயில்
கட்டினார். கோயிலுக்கு குடமுழுக்கு செய்யவும் நாள் குறித்தார்.
அதேநாளில் காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னன், கயிலாயநாதர் கோயிலை கட்டி குடமுழுக்குக்கு ஏற்பாடு செய்திருந்தான். முதல் நாள் இரவு அரசன் கனவில் வந்த இறைவன், “அன்பனே, நீ கும்பாபிஷேகம் செய்யும் கோயிலுக்கு நான் வர இயலாது. திருநின்றவூரில் வாழும் அன்பர் ஒருவர் கட்டிய கோயிலில் நாளை காலை கும்பாபிஷேகம், நான் அங்குபோகிறேன்” என்றார்.
பூசலார் நம்மை விட பெரிய கோயில் கட்டியிருப்பாரோ என நினைத்து பூசாலாரை தேடி வந்து கோயில் எங்கே எனக்கேட்டார் மன்னர். அதற்கு பூசலார் கோயிலை இதயத்தில் கட்டியிருப்பதாக கூறினார். பூசலாரின் இதயத்தில் கோடி சூரியன் பிரகாசத்துடன் ஜொலித்த திருக்கோயில் வடிவத்தை அரசனும் அவனது பரிவாரங்களும் வணங்கியதாக வரலாறு.
Urchavar Sri Poosalar |
Arulmigu Sri Nava Kanniyar ( Image Source ) |
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள இந்த
இருதயாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று சுவாமியையும், மரகதாம்பிகையையும்,
பூசலார் நாயன்மாரையும் வழிபட்டால் இருதய நோய் முற்றிலும் அகலும் என்பது
ஐதீகம்.
நடைத்திறப்பு: காலை 6.30 – 12.30
மாலை 4.30 – 8.30
தொடர்புக்கு: 9444164108
Photos are taken from the website (Dinamalar)
Additional Links: Wiki - Temple , Aalayamkanden Blog, Another Blog - 1
Another Blog - 2, Wiki - Poosalar
மாலை 4.30 – 8.30
தொடர்புக்கு: 9444164108
Photos are taken from the website (Dinamalar)
Additional Links: Wiki - Temple , Aalayamkanden Blog, Another Blog - 1
Another Blog - 2, Wiki - Poosalar
தேசத்துடன்
குபேரன் ஜோதிடர்