குபேர கிரிவலம்
முழு பாவி என்று எவரும் இந்த கலியுகத்தில் பிறப்பதில்லை;
முழு புண்ணிய ஆத்மா என்றும் எவரும் இங்கே பிறப்பதில்லை;
முழு புண்ணிய ஆத்மா என்றும் எவரும் இங்கே பிறப்பதில்லை;
மானுடப்பிறப்பின் நோக்கமே மறுபிறவி இல்லாத முக்திதான். இதை
உணராமல் பல கோடி மனித ஆத்மாக்கள் பணத்தின் பின்பாகவும்,புகழைத் தேடியும்,
அதிகாரத்தை நோக்கியும் ஓடி அரிய மானுட வாழ்க்கையை வீணடித்து
விடுகின்றார்கள்.
சில பல ஆன்மீக ரகசியங்களை எப்போதாவது பொது நல நோக்கில்
யாராவது புண்ணிய ஆத்மாக்கள் வெளியிடுவது வழக்கம். அதில் ஒன்றுதான் குபேர
கிரிவலம்!
Asta Lingams in Thiruvannamalai Arunachaleswarar Temple, Image Source |
கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குபேரன் தமது குபேரப் பட்டணத்தில் இருந்து பூமிக்கு வருகின்றார். வந்து, திரு அண்ணாமலையில் இருக்கும் குபேர லிங்கத்தினை சூட்சுமமாக வழிபடுகின்றார். அதன் பிறகு, அவர் அங்கிருந்து கிரிவலம் புறப்படுகின்றார். இதுதான் அந்த தெய்வீக ரகசியம்.
Geometery of Asta Lingams, Image Source |
கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் குபேரகிரிவலம் வருகை தந்து
வளமான வாழ்க்கையை அருணாச்சலேஸ்வரர் அருளாலும், குபேரலிங்கத்தின் ஆசியாலும்
பெற்றுள்ளார்கள். (ஒரு வருடம் வரை அசைவம்,மது இரண்டையும் தவிர்த்ததால்
வளமான வாழ்க்கையைப் பெற்றார்கள் என்பதை இங்கே நினைவிற்கொள்ளவும்.
இந்த வருடம் குபேரகிரிவலம் 27.11.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று
அமைகிறது. இந்த நாளில் மாலை 6 முதல் 7 மணி வரை நாம் குபேரலிங்கத்திடம்
மனப்பூர்வமாக வேண்டிக் கொள்வோம். அதன் பிறகு, அங்கிருந்து கிரிவலம்
புறப்படுவோம். குபேரலிங்கத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்வோம். பிறகு,நமது
வீடுகளுக்குச் செல்வோம்.
Google Map of Girivalam, Image source, lots of additional information in English could be found here. |
Thiruvannamalai Appan Arulmigu Sri Annamalayar, Annai Arulmigu Sri Unnamulaiammai, Image source |
ஓம் அருணாச்சலாய நமஹ
நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்
குபேரன் ஜோதிடர்