Sunday, April 22, 2018

Pozhichalur Sri Agatheeswarar Temple

சென்னையில் ஒரு வட திருநள்ளாறு - பொழிச்சலூர்

 

Pozhichalur Arulmigu Appan Sri Kala Bairavar, Image source

நவ கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி பகவான். ஒரு ராசி மண்டலத்தில் இருந்து மற்றொரு ராசி மண்டலத்துக்கு மாற இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். அதனாலேயே இவருக்கு மந்தகாரகன் என்ற பெயரும் உண்டு.

ஆனால், ஒரு ராசியில் அமர்ந்துவிட்டால், நீடித்த, நிலையான, தீர்க்கமான பலன்களை நல்கக் கூடியவர் சனி. அது சுப பலனாக இருந்தாலும் சரி, அசுப பலனாக இருந்தாலும் சரி. சனிக்கு எல்லாம் சமம்தான்.

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவை கோட்சார ரீதியாக கெடு பலன்களை தரக் கூடிய அமைப்புகளாகும். சனி, நவ கிரகங்களில் ஆயுள்காரகன் என்பதால், உயிர் தொடர்புடைய விஷயங்களில் அதிக அக்கறை கொள்வது அவசியம். 

Pozhichalur Arulmigu Sri Saneeswara Bhagavan, Image source

உடல் ரோகம், தாய் சுகவீனம், உயிர் ஆபத்து, இல்லறத்திலும், கூட்டுத் தொழிலிலும் தலைபோகும் பிரச்சினைகள் இக்காலகட்டத்தில் எழலாம். முறையான பரிகாரங்களை மேற்கொண்டு, இரண்டரை ஆண்டுகளுக்கு தொடர் வழிபாட்டில் ஈடுபட்டும் தோஷ நிவர்த்திகளை பெற முடியும் என நமது ஜோதிட மூல நூல்கள் வழிகாட்டுகின்றன.


வினைப் பயனை விதிப்படி நிறைவேற்றுபவர் என்றாலும், தண்டிக்கும் செயல்களில் ஈடுபடுவதால் சனீஸ்வரருக்கும் பாவங்கள் அதிகரித்து, சிவனை வேண்டி பாவ விமோசனம் பெற்றதாக ஐதீகம். இதன்படி, சனீஸ்வரர் விமோசனம் பெறும் இடங்களான திருநள்ளாறும், வட திருநள்ளாறு எனப்படும் பொழிச்சலூர் ஸ்தலங்களும் சனி பரிகார ஸ்தலங்களாக விளங்குகின்றன.


திருநள்ளாறு தலத்தில்தான், சனீஸ்வரர் தனித்து நின்று அருள் பாலிக்கிறார். அதைப்போலவே சென்னையில் உள்ள சனி பரிகார ஸ்தலம்தான் பொழிச்சலூர். பம்மல் அருகே உள்ள பொழிச்சலூர் ஸ்தலத்தை வட திருநள்ளாறு என்பர். திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக தனித்து நின்று சனீஸ்வரர் அருள்பாலிப்பது இங்குதான்.


 
Video source and credits: Youtube


இங்குள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் சனி பகவானை வழிபட்டு, தசா, புத்திகளில் வரும் கெடு பலன்கள், ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம சனியின் துர்பலன்கள் நீங்கப் பெறலாம்.  9 சனிக்கிழமைகள் தொடர்ந்து எள் தீபம் ஏற்றியோ, காக்கைகளுக்கு அன்னமிட்டோ பரிகாரம் மேற்கொள்ளலாம்.

இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பு, கோயிலின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள சம்ஹார மகா கால பைரவர். அஷ்டமி தோறும் இங்கு நடைபெறும் பைரவ வழிபாடு மிகச் சிறப்பு வாய்ந்தது. 

அன்பர்கள் அனைவரும், சனியின் சுபப் பார்வை பெறும் வகையிலும்,
பில்லி, சூனியம், நோய், அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பீடைகள் நீங்க பைரவரை வழிபடவும் பொழிச்சலூர் சென்று வருமாறு வேண்டுகிறேன்.


Om Guruve Namaha...

  
நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்