உன்னதத்தை நல்கும் அட்சய திருதியை
இந்து மத கால கணிப்பின்படி யுகங்கள் நான்கு வகைப்படும்.
கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். இவற்றில் முதல் யுகமான
கிருதா யுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவிக்கப்பட்ட நாள் அட்சய திதியை
என்கிறது இந்து சாஸ்திரம். அதே நாளில்தான் திரேதா யுகமும் தோன்றியதாக
ஐதீகம். எப்போதும் குறையாத, அழிவில்லாத என்று பொருள் படும் அட்சய திதியை
நன்நாள், எல்லா வகையிலும் உன்னதத்தை நல்கும் பொன்னாளாகும்.
|
Arulmigu Ammai Kamalavalli Nachiyaar, Thiru Uraiyur, Image source |
அன்றைய
தினத்தில் நல்லவை அனைத்தும் நடைபெறலாம், நல்லவை அனைத்தையும் மேற்கொள்ளலாம்
என்பதே பொதுவிதியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் புண்ணியம்
பிறந்த நாளாகவும், புண்ணியத்தைத் தேடி செல்லாமல், புண்ணியம் நம்மைத் தேடி
வருவதற்கான நாளாகவும் முன்னோர்களால் அறிவுறுத்தப்பட்டது.
|
Ammai Arulmigu Sri Andal, Appan Arulmigu Vatapathrasayee, Sri Villiputhur, Image source |
இந்து
மத விதிகளின்படி பூஜை, வேள்வி, திருக்கோயில் வழிபாடு, குலதெய்வ
பிரார்த்தனை, மூத்தோர் ஆசிர்வாதம் போன்ற நற் செயல்களில் ஈடுபட இந்த தினம்
உகந்ததாகும். கோடை வாட்டும் இக்காலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளின்
தாகம் தீர்த்தல், பசுவுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை உணவிடுதல், ஒருகோடி
புண்ணியம் நல்கும் கோமாதா வழிபாடு, எளியவர்களுக்கு தானமிடுதல், முன்னோர்களை
மனதில் நிறுத்தி வணங்குதல், கல்வியறிவு பெற உதவி செய்தல் போன்ற
நற்காரியங்களை இந்நன்நாளில் மேற்கொள்ளலாம்.
|
Ammai Arulmigu Sri Lalitha Ambigai, Thirumeechayur, Image source |
ஜோதிட கூற்று
அட்சய திருதியை தினத்தில்:
- நல்ல ஆரோக்கியத்தை பெற - எறும்புக்கு பச்சரிசி உணவிடலாம்
- பித்ருக்கள் ஆசி பெற - காகத்துக்கு அன்னமிடலாம்
- வளமான வாழ்க்கைக்கு - பசுவுக்கு வாழைப்பழம், அகத்தி கீரை அளிக்கலாம்.
- மன உளைச்சலில் இருந்து விடுபட - மீனுக்கு பொறி உணவு இடலாம்
- நல்ல நட்புகள் கைகூட - புறாவுக்கு பாசிப்பயிறு உணவளிக்கலாம்.
வெள்ளியை தானமிட்டு அன்பைப் பரப்பவும் இந்நாளையே ஜோதிடம் சிறந்த தினமாக கூறுகிறது.
|
Arulmigu Appan Sri Karpaga Vinayagar, Pillayarpatti, Image source |
அட்சய திருதியையின் காரண நோக்கம்
அட்சய திருதியை தினத்துக்கு ஒரு உளவியல் காரணமும் உண்டு. கலியுகத்தில்
காலம் தள்ளும் நாம், நம்மை நோக்கிய ஒரு உள்நோக்கு பார்வைக்கும், ஆழ்மனத்
தேடலை மேற்கொள்ளவும் இந்த நாள் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.
செய்வனவற்றை நமக்காக அல்லாமல், சமூகம் சார்ந்த நன்மைகளை மேற்கொள்ளவும்,
அனைத்து ஜீவராசிகளையும் நினைத்து பார்த்து ஜீவகாருண்யத்தை பரப்பவும்
மேற்கண்ட செயல்பாடுகள் உதவுகின்றன.
|
Arulmigu Thayar Sri Valli, Arulmigu Thayar Sri Devasena Sametha Appan SubramanyaSwamy, Anuvavi, Image source |
எல்லாமும் நிறைந்த தினம்
இதன்மூலம் நமது கடந்த கால செயல்பாடுகளை சீர்தூக்கி பார்த்து, வரும்
காலங்களில் அன்பையும் அறத்தையும் பரப்ப இந்நன் நாளை மனித இனம்
பயன்படுத்திக் கொள்ளலாம். சுருக்கமாக கூறுவதென்றால், நம்மையும் நமது
மனதையும் சுத்திகரித்துக் கொள்ள இறைவன் அருளிய தினமே அட்சய திருதியை ஆகும்.
|
Arulmigu Appan Si Kala Bala Vairavar, Vairavanpatti, Image source |
2018: ஏப்ரல் 18-ம் தேதி புதன்கிழமை, 18.04.2018, Wednesday
Om Guruve Namaha....
நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்