Thursday, June 29, 2017

Nemam Arulmigu Thiru Aavundeeswarar undanurai Amirthambigai Amman

மிருத்யு தோஷ, மரண தோஷ நிவர்த்திக்கு உதவும்

நேமம் திருத்தல தர்ப்பணம்

 

ரண காயங்கள், கடும் உடல் ரோகங்களால் அவதிப்பட்டு இயற்கை ஏய்துவது கூட ஒரு துர்மரணமே ஆகும். தீவினைகளைத் தவிர்த்து துர்மரண தோஷத்தில் இருந்து விடுபட்டு வலியின்றி இறைவனிடி சேர நேமம், அமிர்தாம்பிகை-ஆவுண்டீஸ்வரர் ஸ்தல தரிசனம் அவசியமான பரிகாரமாகிறது. தீரா நோயால் அவதிப்படுபவர்களின் ரத்த உறவுகள் இத்தலத்துக்கு நேரில் சென்று வழிபட, ஜெனனகால ஜாதகம் அனுமதித்தால் நோய் நிவர்த்தி கைகூடும். அதே நேரம், இறைவனின் சங்கல்பம் வேறுவகையில் இருந்தால் வலியின்றி இறைவனடி சேர வழிபிறக்கும்.

 ஸ்ரீ ஆவுண்டீஸ்வரர் உடனுரை ஸ்ரீ அமிர்தாம்பிகை திருக்கோயில்

 
Appan Arulmigu Sri Aavundeeshwarar, Image source


சென்னை அடுத்துள்ள திருமழிசையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் நேமம் என்னும் அழகிய கிராமம் உள்ளது. உள்ளே இறைவனையும் இறைவியையும் காணும்போது மெய்சிலிர்க்கிறது. ஊரின் ஈசானிய மூலையில் சிவன் கோயில் அமைந்திருப்பது அரிய அம்சமாகும்.

மாடு மேய்க்கும் சிறுவனின் பசுக்களில் ஓன்று லிங்க வடிவத்தின் மீது பால் கரப்பதை அறியாத சிறுவன், சாட்டையால் பசுவை அடிக்க, அந்த அடியை இறைவன் தாங்கிக் கொண்டு பசுவிற்க்கும், சிறுவனுக்கும் காட்சி தந்தான் என்பது ஐதீகம் அந்த அடையாளம் இன்னும் சிவன் மீது காணப்படுகிறது.

Ammal Arulmigu Sri Amirthaambigai, Image source
நவராத்தி, வெள்ளி, பூர நட்சத்திர நாட்களில் வளையல்கள் இட்டு வழிபட வேண்டிய தேவி! குங்குமப்பூவால் அர்ச்சித்திட நற்காரிய சத்திகளை அளிக்கும் அம்பிகை!

அமாவாசையில் பித்ரு லோகத்தார் யாவரும் வந்து வழிபடும் ஆலயம்! நவராத்திரி நாயகியாகப் போற்றபடும் தேவி.

நேமம் ஸ்ரீ அமிர்தாம்பிகை சமேத ஸ்ரீ ஆவுண்டூ ஸ்வரர் திருக்கோயில் பல கோடி யுகங்களாக இப்பூவுலகைத் தாங்கும் அஷ்டதிக்குப் பாலகர்களும், நேமம் திருக்குளத் திர்த்தத்தில் நீராடித் தம் களைப்பை இமைப்பொழுதில் போக்கிக் கொள்ள உதவும் ஒளஷதத் தீர்த்தத் தலமாக, பிணி தீர்க்கும் அருட்பெரும் ஆலய பூமியாக, நேமம் ஸ்ரீ அமிர்தாம்பிகை சமேத ஸ்ரீ ஆவுண்டீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது.

இறைவன் இறைவியைத் தவிர பால விநாயகர், தட்சணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், சிவவிஷ்ணு துர்க்கை, வள்ளி தெய்வானை உடன் முருகப் பெருமான், வரசித்தி விநாயகர், பைரவர், காசி விஸ்வவநாதர், விசாலாட்சி, நந்தீஸ்வரர் பல பீடம் என அனைத்தும் ஓருங்கே அமைந்துள்ளன.

இங்குள்ள சிவாலயம் புண்ணியத் தலம் என்று குறிப்பிடப்படுகிறது. அக்காலத்தில் பைரவர் சந்நிதியை முதன்மையாகக் கொண்டு ஆலயம் அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். பெண்களாய் பிறந்த ஒவ்வொருவரும் இங்குள்ள அமிர்தாம்பிகை அம்பிகையை வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய புண்ணியஸ்தலம்.
Arulmigu Sri Amudha Yogeeshwara Bhairava, Image source

வழித்தடம்

 

திருவள்ளூர்-பூவிருந்தவல்லி மார்க்கத்தில், பூவிருந்தவல்லியில் இருந்து 10 கி.மீ., நேமம் கூட்டு சாலையில் இருந்து 1.5 கி.மீட்டரில் திருத்தலம் அமைந்துள்ளது.

தொடர்பு: எம்.குமார் - (+91) 98407 70248.


Interesting internet links with pictures:

 Om Guruve Namaha...
 
நேசத்துடன்

குபேரன் ஜோதிடர்

Friday, June 16, 2017

Thirukollikadu Sri Pongu Saneeshwara Bhagavan

கெடு பலன் நீக்கும் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர்!


காவிரி நதியை ஒட்டி அமைந்துள்ள நவக்கிரக பரிகார ஸ்தலங்கள் எண்ணிலடங்காதவை. அவற்றில் காவிரியின் தென்கரையில் திருத்துறைப்பூண்டி அருகே அமைந்துள்ள திருக்கொள்ளிக்காடு சனி பகவானின் ஸ்தலம் ஆகும்.

Amma arulmigu Sri Mirthupadanayagi udanurai Appan arulmigu Sri Agneeshwarar, Image Source

பஞ்சினும் மெல்லடியாள் உடனுறை அக்னீஸ்வரர் அருள்பாலிக்கும் இந்த தலத்துக்கு அக்னிபுரி என்ற பெயரும் உண்டு. இங்கு அக்னி பகவான் சிவபூஜை மேற்கொண்டதால் இத்தகைய பெயர் வந்தது. இக்கோயிலில் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார் பொங்கு சனீஸ்வரர்.

சனியின் சிறப்பு


நவ கிரகங்களிலேயே ஈஸ்வரர் பட்டம் பெற்றவர் சனி பகவான் ஒருவர்தான். மந்தன் எனவும் மந்தகாரகன் எனவும் அறியப்படுகிறார் சனி. சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சனி பகவானுக்கு, "நவ கோள்களில் முக்கியத்துவம் மிகுந்த இடத்தையும், கர்மவினைகளுக்கு ஏற்ப தண்டனை அளிக்கும் பணியையும்" அருள்கிறார் ஈஸ்வரன்.

மனிதர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தண்டனைகளையும் பலன்களையும் அளிக்கத் தொடங்குகிறார் சனி பகவான். மனிதர்களின் மனம் என்று தண்டனைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. அப்படியே ஏற்றாலும் செய்த பாவங்களை மனதில் நினைத்து செய்தவற்றுக்காக வருந்துபவர்கள் யார் இருக்கிறார்.

எனினும், சனி பகவான் தன் பணியை தீவிரமாக தொடர்ந்ததால் அவர் மீது பெரும் அச்சம் ஏற்படுகிறது. அவரது கடும் தண்டனையால் நவ கோள்களில் அஞ்சத் தகுந்தவராகவும், "சனி ஒரு தோஷம்" என்ற பெயரும் அவருக்குக் கிடைக்கிறது.

Sri Sani Bhagavan's Siva Pooja at Agni Vanam, Image Source


இதனால் வேதனையுற்ற சனி பகவான், தாமும் மற்ற கோள்களைப் போல் அருள்பாலிக்கவும், கேட்ட வரங்களைத் தருபவராகவும் மாற விரும்பி ஈஸ்வரனை நோக்கி இத்தலத்தில் (அக்னிவனம்) தவம் மேற்கொண்டார். அதன்மூலம் ஈஸ்வரர் பட்டமும் பெறுகிறார்.

Amma arulmigu Sri Mahalakshmi, arulmigu Sri Pongu Sani Bhagavan, Agni Vanam, Image Source


அதன் மூலம் அவரிடம் இருந்து தண்டனை அளிக்கும் ஆயுதங்கள் மறைந்து அன்பை பரப்பும் ஏர் கலப்பை கிடைக்கிறது. அருகே மகா லட்சுமியும் அமர்கிறார். நேர் எதிரே அவரது குருவான பைரவரும் அமைந்துள்ளார். (குரு பார்க்க கோடி நன்மை எனும் விதியின் அடிப்படையில்).

Arulmigu Guru Sri Bairavar, Thirukollikadu, Image Source

இதன்மூலம் பொங்கு சனீஸ்வரராக மாறி, சனி தசை, சனி புத்தி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி போன்ற காலங்களில் மனிதர்களின் கெடு பலன்களை குறைத்து நற்பலன்களை பரப்புகிறார். இங்குள்ள பொங்கு சனீஸ்வரரையும், பைரவரையும் ஒரே நேரத்தில் குடும்பத்துடன் வழிபடுவது சிறப்புக்குரியதாகும். அதன்மூலம் கூடினார்க்கு சனியின் கேடில்லை என்ற நிலை கிடைக்கிறது.

ஜனனகால ஜாதகத்தில் சனியால் பாதிக்கப்பட்டவர்கள், சனி தசை அல்லது புத்தி நடப்பவர்கள், கோட்சாரப்படி அஷ்டம சனி உள்ளவர்கள் (தற்போது  2017ல் மேஷ ராசியினரும், 2017 செப்டம்பருக்கு பிறகு ரிஷப ராசியினரும்) சனி கோளின் ஆதிக்கத்தில் உள்ள அனைவரும், இந்த ஸ்தலத்தில் பொங்கு சனீஸ்வரரை வழிபட்டு எள் தீபம் ஏற்றுவதும், எள் உருண்டைகளை தானமிடுவதும் மிக மிக சக்தி வாய்ந்த, மிக அவசியமான பரிகாரமாகும்.

திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரரை வழிபட்டு கெடு பலன் நீங்கி, பாதிப்பு குறைந்த பல அன்பர்கள் அதை நேரில் வந்து சிலாகித்து தெரிவித்துள்ளனர். எனவே, அன்பர்கள் அனைவரும் இத்தலத்துக்கு ஒருமுறையேனும் சென்று சனி தீர்த்தத்தில் கால் நனைத்து, சனி பகவானை வழிபட்டு பலனடைய வேண்டுகிறேன்.


முகவரி:
அக்னீஸ்வரர் திருக்கோயில்
திருக்கொள்ளிக்காடு போஸ்ட் - 610 205
திருத்துறைப்பூண்டி வட்டம்
திருவாரூர் மாவட்டம்
04369 - 237454
04366 - 325801

Other ineresting weblinks:

 

 Om Guruve Namaha...


நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Wednesday, June 7, 2017

Vaikasi Visakam

முருகன் அவதரித்த வைகாசி விசாகம்


Arulmigu Sri Thiruchendhur Murugan


  • 2018 வைகாசி விசாகம்  - 28.05.2018, திங்கட்கிழமை
  • 2017 வைகாசி விசாகம்  - 07.06.2017, புதன்கிழமை

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம் முருகன் அவதரித்த புனித நாளாகும். அசுரர்களின் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வர சிவபெருமானின் மூன்றாவது கண்ணில் இருந்து ஜனனித்த ஆறு நெருப்புப்  பொறிகளின் உஷ்ணம், அக்னி பகவானையும் சுட்டது. எனவே, இதை உஷ்ணாவதாரம் என்றும் கூறலாம். அக்னி பகவானால் சரவணப் பொய்கையில் விடப்பட்ட ஆறு நெருப்புப் பொறிகளும் குளிர்ந்து அழகிய மழலைகளாயின. அவற்றுக்கு கார்த்திகைப் பெண்கள் பால் தந்து பசியாற்ற, ஓருடலில் ஆறுமுகத்துடன் அவதரித்தார் தமிழ்க் கடவுள்.


இந்த அழகிய நன்னாளில் முருகனை மனதில் நிறுத்தி வழிபடுவதும், குறிப்பாக உண்ணா நோன்பிருப்பதும், மவுன விரதம் கடைபிடிப்பதும் மிகவும் சக்திவாய்ந்த பரிகாரங்களாக தமிழர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.

Arulmigu Amma Valli Thayar, Amma Devasena Thayar samedha Sri Senthilnathan. Image source

திருமணத் தடைகள் நீங்க மண வாழ்வு கைகூடவும், மகப்பேறு பாக்கியத்தை பெற்று மழலைகள் ஈனவும், வம்பு வழக்குகளால் அலைகழிக்கப்படுபவர்கள் எதிரிகளை வீழ்த்தவும், எல்லாம்வல்ல முருகன் அருளும் 16 செல்வங்களும் வாழ்வில் நிறைந்திருக்கவும் வைகாசி விசாகத்தில் விரதமிருப்பதும், மவுனம் காப்பதும் அவசியமாகும். இந்த எளிய ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரத்தை மேற்கொண்டு முருகனை மனதில் நிறுத்தி வழிபட்டு அன்பர்கள் அனைவரும் பலனடைய வேண்டுகிறேன்.

Vaikasi Vishakam abhisekham for Sri Skandan at Kadavul Temple, Hawaii. Image source & Information



Sri Skandan alangaram after Vishakam abhisekam, Kadavul Temple, Hawaii. Image source & Information
Interesting internet blogs on Murugan and Vaikasi Visakam:

முருகன், தனிவேல் முனி, நம் குரு ... என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே


Source: Youtube, Renedering of Sri Pamban Swamigal's Kumarasthavam (குமாரஸ்தவம்) by Thiru Seergazhi Govindarajan

Om Guruve Namaha...



நேசத்துடன்

குபேரன் ஜோதிடர்