மகப்பேறுவுக்கும், குரு பரிகாரத்துக்கும் சிறந்த தலம்
திருச்சி அருகே வசித்த சிவசிதம்பரம் பிள்ளை மற்றும் மீனாம்பிகை
தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லை. போகாத கோயில்களே இல்லை.
ஒருநாள் இருவர் கனவிலும் தோன்றிய அண்ணாமலையார், தாமே உமக்கு மகனாக
பிறப்பதாக கூறினார்.
இன்ப அதிர்ச்சியுடன் காலையில் எழுந்த தம்பதி, நேராக திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட்டு திரும்பினர்.
இன்ப அதிர்ச்சியுடன் காலையில் எழுந்த தம்பதி, நேராக திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட்டு திரும்பினர்.
இறைவாக்குப்படி பிறந்த ஆண் மகவுக்கு அருணாச்சலம் என்றே பெயர் சூட்டினர். குழந்தைமையை தாண்டிய ஞானம் பெற்றிருந்த அருணாச்சாலம் சிறு வயது முதலே தியானத்தில் திளைத்தார். பின்னாட்களில் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளாக அறியப்பட்டார்.
மனிதனாய் பிறந்து ஞானம் எய்தி இறையருள் பெற்று சீரஞ்சியாவோர், சித்தர் என்று அழைக்கப்படுவர். அவ்வகையில் திருவாரூர் நகரில் மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றங்கரையில் 1835-ம் ஆண்டு ஜீவசமாதி அடைந்த குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளும் சித்தராக அறியப்படுகிறார்.
ஸ்வாமிகள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.
Guru Dhaksinamoorthy Jeeva Samadhi, Madapuram |
வியாழன் கிரகமாக அறியப்படும் குரு பகவானின் பெயர்ச்சியின்போது ஏற்படும் மாற்றங்களுக்கும், ஜனன கால ஜாதகங்களில் குரு கிரகத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோரும் இந்த ஜீவசமாதி மடத்துக்கு சென்று வழிபடுவது மிகவும் பலன்தரத்தக்கது ஆகும்.
குறிப்பாக, மகப்பேறு வேண்டி நிற்கும் தம்பதிகள், தவிர்க்க முடியாமல் செல்ல வேண்டிய புனிதத் தலமாகவும் திருவாரூர் மடப்புரம் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடம் விளங்குகிறது. வியாழக்கிழமை நடைபெறும் பூஜைகளும், குழந்தை இல்லாதவர்களுக்கு மடிப்பிச்சை வழங்கும் பூஜையும் இங்கு சிறப்பு வாய்ந்தவையாகும்.
A detailed story and narration on our Guru Dhaksinamoorthy Swamigal, please listen to the video in this article.
Video source: youtube. | Copyright: Nandi TV | Oration by: Kudavasal Pulavar Thiru V. Ramamurthy | Date:31.03.2015 | Place: தென்பழனி ஸ்ரீ சத்திய நாராயண கருவூர் சித்தர் ஆஸ்ரமம் - தஞ்சாவூர்
குருதட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடத்தின் தொடர்புக்கு: (0091) 04366–222732 மற்றும் (0091) 94434 36393
Om Guruve Namaha....
நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்