Monday, July 17, 2017

Arulmigu Sri Bairavar Theipirai Vazhipadu

தேய்பிறை அஷ்டமி‬ பைரவர் வழிபாடு 

 

Thiruvannamalai Arulmigu Sri Kalabairavar, Image source


நட்சத்திரம், திதிகள், கிழமைகள் போன்றவற்றில் பல்வேறு வழிபாடுகள் செய்கிறோம். சாதாரணமாக சுபகாரியங்கள் செய்வதற்கு தவிர்க்கும் திதிகளில், இறைவனுக்குரிய வழிபாடுகளை மேற்கொள்கிறோம். கிருஷ்ணருக்கு அஷ்டமி திதியிலும், ராமருக்கு நவமி திதியிலும் ஜெயந்தி கொண்டாடுகிறோம்.

Vairavanpatti Arulmigu Sri Bairavar, Image source

அந்த வகையில் இறைவனின் அம்சமாக, அவதாரமாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு காலம், காலமாக நடைபெற்று வருகிறது. பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாகவும் மேலும் 108 வரை உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்கு தனி சந்நதி இருக்கும். அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது.
Arulmigu Sri Bairavar, Image source and additional information

நட்சத்திரம், திதிகள் இணைந்து வருவதும், தனியாக வருவதும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்ததாகும். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதி சிறப்பானதாகும். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர்.

  1. சித்திரை: ஸ்நாதனாஷ்டமி
  2. வைகாசி: சதாசிவாஷ்டமி 
  3. ஆனி: பகவதாஷ்டமி 
  4. ஆடி: நீலகண்டாஷ்டமி 
  5. ஆவணி: ஸ்தாணு_அஷ்டமி
  6.  புரட்டாசி: சம்புகாஷ்டமி 
  7. ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி 
  8. கார்த்திகை: கால பைரவாஷ்டமி 
  9. மார்கழி: சங்கராஷ்டமி 
  10. தை: தேவதாஷ்டமி 
  11. மாசி: மகேஸ்வராஷ்டமி 
  12. பங்குனி: திரியம்பகாஷ்டமி
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர், சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும்.  அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.

Arulmigu Sri Dhaksinakasi Kalabairavar, Image source

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஐந்து வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், ஐந்து தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும், ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும், காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

Arulmigu Sri Bairavar, Image source

நல்லருள் கிட்ட பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தெழில்களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.
Arulmigu Sri Swarna Bairavar, Image source

எந்தவித பூஜைகள் செய்யா விட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார். முதலில் துவங்கும் காலை பூஜையும், இரவில் நடக்கும் இறுதியான பூஜையும் ஸ்ரீ பைரவருக்கே உரியது. பற்றற்ற நிலையில் நிர்வாண கோலத்தில் பைரவர் வீற்றிருப்பதால் பைரவர் விக்ரகத்தை தொட்டு வணங்குதல் நாமே சென்று புஷ்பம் சாற்றுதல் ஆகியவை கூடாது.
Thadikombu, Arulmigu Sri Swarna Akarshana Bairavar, Image source

சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் பரணி நட்சத்திர நாட்கள் ஸ்ரீ பைரவருக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் ஸ்ரீ பைரவரை வழிபட உகந்த நாட்கள் தான். ஆயினும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி ஸ்ரீ பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக நடைமுறையில் உள்ளது.

 ‘‘அட்ட பைரவருமோருருவாகி கிருட்ண பட்ச யட்டமியந்தியில்
அருள் பரிபாலிக்க தொழுதிருப் பாருக்காததேது’’ 
 - (என்கிறது அகஸ்தியர் நாடி)

சீர்காழியில் உள்ள சட்டை நாதர் என்னும் பைரவரை வழிபடுவதன் சிறப்பை இப்படி விளக்குகிறது அகஸ்திய நாடி.

Srikazhi Arulmighu Uma Mageshwarar - Appan Thoniappar, Image source

Srikazhi Arulmigu Sri Sambhandhar, Image source

திருஞானசம்பந்தராகப் போற்றப்படும் ஆளுடைப் பிள்ளை என்ற ஞானக் குழந்தை ஞானம் பெற்ற கோயில் இது. பிரம்ம தீர்த்தக் கரையில் அம்பாள் பொற்கிண்ணத்தில் ஞானசம்பந்தருக்கு பால் ஊட்டிய தலம். நாம் ஒவ்வொரு வரும் தொழ வேண்டிய அற்புதக் கோயில். ஆதி சங்கரர் தமது "சௌந்தர்ய லஹரி" என்ற நூலில், ‘‘ஞானப்பால் பார்வதி தேவியிடம் இந்த திராவிட சிசு உண்டது சத்தியம்’’ என கொண்டாடுகிறார்.

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்
காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமாபுர[ம்] மேவிய பெம்மான் இவன் அன்றே
                                                        -  திருஞானசம்பந்த பிரான்


Sirkazhi Arulmigu Sri Sattainathar, Image source

திருநாவுக்கரசரை "அப்பர்" என ஞானசம்பந்த பிரான் அழைத்துப் போற்றிய புண்ணிய கோயில் இந்த சட்டநாதர் கோயில். சீர்காழி என்ற ஊருக்கே புகழைச் சேர்த்த இந்த சட்டநாதர், பைரவ சுவாமியின் மறு பதிப்பு வேற்றுருதான். அஷ்டமி திதி தேய்பிறையில் இங்கு எட்டு வித பைரவ மூர்த்திகளும் கூடி நின்று பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனராம். எனவே, "தேய்பிறை அஷ்டமி திதி மாலை வேளையில் சட்ட நாதனை தொழுபவர் பெரும் பாக்யவான்களே" என்கிறார் அகஸ்தியர்.

 
Video source, Thiru Gnanasambhdhar'in Padal on Brahamapuram

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீ பைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கிய வரும் பைரவரே.
Kundadam Arulmigu Sri Kongu VadukanathaSwamy,Image source

தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப் பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப் பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார். அதனால் தான் ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.

Thalainayaru Arulmigu Sri Sattainatha Swamy, Image source and additional information
 
தேய்பிறை அஷ்டமி, குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது. சாதாரணமாக நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.

Nagapattinam Arulmigu Sri Bairavar, Image source

மிக அரிதாக சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான் மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம். ஏவல், பில்லி, சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனி தோஷம், நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

Adiyamankottai Arulmighu Sri Kala Bairavar, Image source

தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்த நாளில் நாம் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம். ராகு காலத்தில் பைரவர் சன்னதியில் அமர்ந்து சொர்ணாகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை ஜெபித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும். 

பைரவ காயத்ரி

ஷ்வானத் விஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி

தன்னோ பைரவ ப்ரச்சோதயாத்!

இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்டமி வழிபாட்டினை பின் பற்றி எல்லா நலமும் அடைவோமாக!. "ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!


தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!


காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி! 

The many contents of this article was forwarded to me in an email and the contents correlate with several articles (article 1article 2 , article 3) posted in this blogspace. I have added some of my one contents to enrich this article. I did some internet searches to find out the original sources of this post, it is possible that this article is being composed from several other sources. We would like to thank the authors (ஆதிரை, தில்லை இளந்தென்றல்) for their articles.
Source 1
Source 2 

Additional information on Arulmigu Sri Kala Bairavar: agasthiar.org
Article from Thalir blogspace

 Om Guruve Namaha...  

 

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

Thursday, July 13, 2017

Pitha Pirai Sudi, our Appan Shivan


Appar Sundarar'in Thiru Padhigam on our Thiruvennainallur Appan Kirupapureeshwarar

 

             

Appar Sundarar, Thirumurai - 7
Our heartfelt thanks to: Thiru Venkatesan Othuvaar for his beautiful rendering.

 

Om Guruve Namaha...


நேசத்துடன்  
குபேரன் ஜோதிடர்

 

Thiruvidaimaruthur Arulmigu Mahalingeshwara Swamy

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வர சொரூபம்

Arulmigu Appan Sri Mahalingaeshwarar, Image source
 சிவரூபங்களில் மகாலிங்கேஸ்வர சொரூபம் மிக மிக மகத்துவம் வாய்ந்தது. சிவத்துவத்தின் பரிபூரணமும் இதில் அடங்கிவிடும் என்பது ஐதீகம்.

முன்ஜென்மம், பின்ஜென்மம் என்று அனைத்து நிலை பிறப்புகளிலும் சாபல்ய யோகம் பெற மகாலிங்கேஸ்வரரையே அக்காலத்தில் மக்களும் மன்னர்களும் வணங்கினர்.

Arulmigu Sri Amma Perumulaiyal, Image source
இத்தகைய சிறப்பு வாய்ந்த மகாலிங்கேஸ்வர பெருமான் திருவிடைமருதூர், சதுரகிரி, ஸ்ரீசைலம் (ஆந்திரா) ஆகிய இடங்களில் மட்டுமே காட்சியளிக்கிறார்.
இவற்றில் பாமரர்கள் செல்வதற்கும் வணங்குவதற்கும் எளிமையான ஸ்தலம் திருவிடைமருதூராகும்.

ஊழ்வினை தோஷம் (பிரம்மகத்தி தோஷம்), கோ தோஷம், பஞ்சபட்சி தோஷம், உயிர்பலி தோஷம், பெண் சாபம், பித்ரு சாபம், சத்ரு சாபம் என அனைத்து வகையான பீடைகளும் அகல திருவிடைமருதூர் பெருமானை வணங்குவது மிக எளிய ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரமாகும்.

நன்னம்பிக்கையை மனதில் வைத்து திருவிடைமருதூர் சென்றால் மேற்கண்ட அனைத்து வகையான தோஷங்களும் நீங்குவதோடு, ஜாதகரீதியில் ஏற்பட்டு வரும் எல்லா வகையான திருமணத் தடைகளும் அகலும் என்பது ஊர்ஜிதமான உண்மையாகும்.

ஆதலால்தான், திருமணத் தடை நீங்க, மழலை ஒலி கேட்க திருவிடைமருதூரையே முற்றும்முதலுமான பரிகாரமாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.

திருவிடைமருதூருக்கு செல்வதில் உரிய முறைமைகளை பின்பற்றுதலும் அவசியமானதாகும். இதை புனிதப் பயணமாக மனதில் நிறுத்தி, புலால் உண்பதை தவிர்த்து பயணம் மேற்கொள்ள வேண்டியது மகிவும் அவசியம்.

Karuniga Theertham, Image source
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வர ஸ்தலத்தின் கிழக்கு வாசலில் உள்ளே சென்றவுடன், கருநிகா தீர்த்தத்தில் குளித்துவிட்டு, விநாயகரை வணங்கிவிட்டு, நந்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவேண்டும்.

பிறகு, சிவன், அம்பாள், மூகாம்பிகை ஆகிய மூவருக்கும் சங்கல்ப பூஜை செய்து, மனதார வேண்டிவிட்டு, மேற்கு வாசல் வழியாக வெளியேற வேண்டும். (கிழக்கு வாயில் வழியாக வரும்போது, லிங்கேஸ்வரனை கண்டு ஒதுங்கி நிற்கும் ஊழ்வினைகள், மேற்கு வாசல் வழியாக வெளியேறும்போது நம்மை நிரந்தரமாய் பிரிந்துவிடும் என்பது ஐதீகம்) மனச்சுத்தியோடும், உடல்சுத்தியோடும் இப்பரிகாரத்தை மேற்கொண்டால், மணத்தடைகள், மகப்பேறு தடைகள், உடல்ரோகங்கள், மனபலகீனங்கள், சத்ரு அச்சங்கள், வழக்கு விவகாரங்கள், மணவாழ்வில் நெருடல்கள் என அனைத்தும் நீங்கப்பெறலாம்.

Other interesting links 

  

Om Guruve Namaha...
  
நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்