Sunday, October 9, 2016

Madapuram Sri Guru Dhaksinamoorthy Swamigal

மகப்பேறுவுக்கும், குரு பரிகாரத்துக்கும் சிறந்த தலம்





திருச்சி அருகே வசித்த சிவசிதம்பரம் பிள்ளை மற்றும் மீனாம்பிகை தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லை. போகாத கோயில்களே இல்லை. ஒருநாள் இருவர் கனவிலும் தோன்றிய அண்ணாமலையார், தாமே உமக்கு மகனாக பிறப்பதாக கூறினார்.
இன்ப அதிர்ச்சியுடன் காலையில் எழுந்த தம்பதி, நேராக திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட்டு திரும்பினர்.

இறைவாக்குப்படி பிறந்த ஆண் மகவுக்கு அருணாச்சலம் என்றே பெயர் சூட்டினர். குழந்தைமையை தாண்டிய ஞானம் பெற்றிருந்த அருணாச்சாலம் சிறு வயது முதலே தியானத்தில் திளைத்தார். பின்னாட்களில் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகளாக அறியப்பட்டார்.

மனிதனாய் பிறந்து ஞானம் எய்தி இறையருள் பெற்று சீரஞ்சியாவோர், சித்தர் என்று அழைக்கப்படுவர். அவ்வகையில் திருவாரூர் நகரில் மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றங்கரையில் 1835-ம் ஆண்டு ஜீவசமாதி அடைந்த குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளும் சித்தராக அறியப்படுகிறார்.

ஸ்வாமிகள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.

Guru Dhaksinamoorthy Jeeva Samadhi, Madapuram


வியாழன் கிரகமாக அறியப்படும் குரு பகவானின் பெயர்ச்சியின்போது ஏற்படும் மாற்றங்களுக்கும், ஜனன கால ஜாதகங்களில் குரு கிரகத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோரும் இந்த ஜீவசமாதி மடத்துக்கு சென்று வழிபடுவது மிகவும் பலன்தரத்தக்கது ஆகும். 

குறிப்பாக, மகப்பேறு வேண்டி நிற்கும் தம்பதிகள், தவிர்க்க முடியாமல் செல்ல வேண்டிய புனிதத் தலமாகவும் திருவாரூர் மடப்புரம் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடம் விளங்குகிறது. வியாழக்கிழமை நடைபெறும் பூஜைகளும், குழந்தை இல்லாதவர்களுக்கு மடிப்பிச்சை வழங்கும் பூஜையும் இங்கு சிறப்பு வாய்ந்தவையாகும்.


A detailed story and narration on our Guru Dhaksinamoorthy Swamigal, please listen to the video in this article.

 
Video source: youtube. | Copyright: Nandi TV | Oration by: Kudavasal Pulavar Thiru V. Ramamurthy    | Date:31.03.2015 | Place: தென்பழனி ஸ்ரீ சத்திய நாராயண கருவூர் சித்தர் ஆஸ்ரமம் - தஞ்சாவூர்

குருதட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி மடத்தின் தொடர்புக்கு: (0091) 04366–222732 மற்றும் (0091) 94434 36393


Om Guruve Namaha....


நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்

பைரவா... (Sri Bairvar)

பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். காலம், காலமாக உள்ள இந்த உண்மையை சமீபகாலமாகத்தான் மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார். 
Arulmigu Sri Kala Bairavar, Adiyamankottai (Temple website). Please also read: Image source


ஈசனின் மகனாகவும் புராணங்கள் இவரை குறிப்பிடுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து கோடானு கோடி மக்களை இவர் காத்து வருகிறார். இதற்காக இவருக்கு திரிசூலம் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளதாம். இதனால்தான் ``பைரவர் வழிபாடு கைமேல் பலன்'' என்ற பழமொழி ஏற்பட்டது. 

``பைரவா....'' என்று மனதுக்குள் நினைத்த பாத்திரத்தில் அவர் நம்முன் வந்து நிற்பார். அவருக்கு நாம் பூஜை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, கஷ்டமான நேரங்களில் நாம் மனதை ஒருமுகப்படுத்தி நினைத்தாலே போதும், பைரவர் ஓடோடி வந்து உதவுவார். பைரவர் பற்றற்ற நிலையில் நிர்வாணமாக, நீல நிற உடலமைப்புடன் இருப்பவர். 

எனவே எல்லாரும் அவரைத் தொட்டு வணங்கக் கூடாது. அவர் பாதங்களில் பூக்களைப் போட்டு வழிபடலாம். பைரவர் மொத்தம் 64 வடிவங்களில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்த 64 வடிவங்களில் கால பைரவர் தனித்துவம் கொண்டவராகக் கருதப்படுகிறார். 

கால பைரவருக்கு தனிக்கோவில் கட்டக் கூடாது என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் சில தலங்களில் மட்டுமே கால பைரவ வழிபாடு உள்ளது. தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் 9-ம் நூற்றாண்டில் அரசர் அதியமான் கட்டிய கால பைரவர் கோவில் உள்ளது.
அஷ்டமி நாட்களில் பைரவரை வணங்க உகந்த நாளாகும். 

சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். 

அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும், திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

இவ்வளவு பெருமைகளையும் அருட்திறனும் கொண்டு விளங்கும் பைரவரை சிவாலயங்களிலும் தனி ஆலயங்களிலும் கண்டு வழிபடலாம்.

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்