Sunday, June 10, 2018

Kundrathur Murugan Temple

மகிழ்ச்சியில் திளைக்கும் குன்றத்தூர் ஆண்டவன் 




சென்னை அருகே குன்றத்தூரில் சிறு குன்றின் மீது வீற்றிருக்கும் முருகக் கடவுளுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு....

  • ஒன்று முருகன் குன்றின் மீது வந்தமர்ந்த தருணம்
  • இரண்டு தேவியர் சமேதராக முருகன் பார்க்கும் திசை

இவ்விரு சிறப்புகளால்தான் சில முக்கிய தேவைகளுக்கான பரிகார ஸ்தலமாக குன்றத்தூர் விளங்குகிறது.
Kundrathur Arulmigu Appan Sri Subramanya Swamy Temple, Image source

குன்றத்தூரின் முதல் சிறப்பு

 

Ammai Arulmigu Sri Valli, Ammai Arulmigu Sri Devasena sametha Appan Arulmigu Subramanya Swamy, Image source

 

அன்பும், கருணையுள்ளமும், ஈகை குணமும் கொண்டவராக விளங்குகிறார் குன்றத்தூர் முருகன். முருகக் கடவுளின் ஒவ்வொரு மனநிலைக்கும் ஏற்ப அந்தத்த  அமைவிடங்கள் பரிகார ஸ்தலங்களாக விளங்குகின்றன.

திருத்தணியில் திருமணம் புரிவதற்கு முன்பாக முருகன் வந்தமர்ந்த ஸ்தலம்தான் குன்றத்தூர். குதூகல மனதுடனும், குழந்தை மனோபாவத்துடனும் முருகன் மகிழ்ச்சியில் திளைக்கும் ஸ்தலம் குன்றத்தூர். அதனால்தான், குன்றத்தூர் வந்து வணங்கும் பக்தர்களுக்கு மிகையான மகிழ்ச்சியை தனது பரிசாக மகிழ்வுடன் தருகிறார் முருகன்.

 

முதற்சிறப்பின் முக்கிய பரிகாரங்கள்


Arulmigu Sri Valli Thayar Arulmigu Sri Devasena Thayar sametha Appan Arulmigu Sri Subramanya Swamy, Image source
தேவியருடன் குன்றத்தூரில் குதூகல மனநிலையில் திளைக்கும் தமிழ்க்கடவுள், நல்மண வாழ்க்கை, தம்பதிகளின் அன்யோன்யம், மழலைப்பேறு, சகோதர ஒற்றுமை பாசம், அனைத்திலும் வெற்றி ஆகியவற்றை பக்தர்களுக்கு அருளி பெரும் உபகாரம் புரிகிறார்.

குன்றத்தூரின் இரண்டாம் சிறப்பு

 

Arulmigu Appan Sri Skandhar, Skanda Shasti, Kundrathur, Image source

 

குன்றிருந்தால் அங்கே குமரர் இருப்பார் என்பதற்கு இணங்க, சிறு குன்றென்றாலும் குன்றத்தூரில் ஏறியமர்ந்து வீற்றிருக்கிறார் தமிழ்க்கடவுள். இங்கு தேவியருடன் எழுந்தருளி, வடதிசையை நோக்கி பார்வையை செலுத்துகிறார். இதுவே குன்றத்தூரின் இரண்டாம் சிறப்பு.

வடதிசை என்பது ஜோதிடரீதியாக குபேர திசை என கணிக்கப்படுகிறது. எனவேதான், வடதிசை முருகனை வேண்டி வணங்கினால், பொருளாதாரம் மேன்மை அடையும்.
  

இரண்டாம் சிறப்பின் முக்கிய பரிகாரங்கள்

 
Kundrathur Murugan Temple's 84 steps, Image source

தொழில், வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றுக்கான சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது குன்றத்தூர். அரசு மற்றும் தனியாரிடம் இருந்து வரவேண்டிய வரவுகள், குடும்ப நிதி மேம்பாடு என எல்லா வகையான பொருளாதார தேவைகளுக்கும் வாரி வழங்குவார் முருகர் என்பது நாடிச் சென்ற அன்பர்களின் அனுபவ உண்மையாகும்.


குன்றத்தூர் படிகளில் படி விளக்குகள் ஏற்றி, கொடிமரத்தில் நெய்தீபமேற்றி வழிபட 16 செல்வங்களையும் வாரி வழங்குவார் முருகன் என்பது மிகச் சிறந்த ஜோதிட பரிகாரம்.

Arulmigu Sri Valli Thayar, Arulmigu Sri Devasenai Thayar sametha Arulmigu Appan Sri Kundrathur Murugan, Image source
முருகன் என்றால் அழகு. அன்பும், அறிவும், கருணையும் நிரம்பிய எல்லையில்லா பேரழகு. அதற்கொப்ப இங்கே அழகிய மணாளனாய் ஜொலிக்கும் குமரரை மனதில் நிறுத்தி தவமிருந்தால் பண்பும், பாங்கும் மிக்க மனமொத்த இல்லறத் துணை அமைவது கண்கூடு.


தேவியர் சூழ, எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைக்கும் வடதிசை நோக்கும் குன்றத்தூர் ஆண்டவரை, நம் தமிழ்க்கடவுள் என்ற குடும்ப உணர்வோடு வந்து வணங்கும் யாவர்க்கும் அனைத்தையும் அருள்வார் முருகன் என்பது திண்ணம்.

Copy from the Sthala Puranam of Kundrathur Subramanya Swamy Temple

 

 ... வேலும் மயிலும் துணை ...

 

Vallimalai Sri Sachidananda Swamigal, Image source & more information



திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே....

 -வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய   'வேல் மாறல்'

 Source: Youtube

 

Om Guruve Namaha... 

 

நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்