Tuesday, April 4, 2017

Panguni Uthiram

 பங்குனி உத்திரத்தில் பேரருள் புரியும் தமிழ்க் கடவுள்!

 
Sri Shanmuga Subramanya Swamy painting by Raja Ravi Verma, Credit - Wikipedia

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தெய்வமாய் விளங்கும் முருகனுக்கு என்று சில விசேஷ தினங்கள் உண்டு. அவை தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் ஆகிய தினங்களாகும்.

தாயிடம் இருந்து முருகன் வேலை பெற்ற தினம் தைப்பூசமாகும். வெற்றியைக் குறிக்கும் அன்றைய தினம் முருக வழிபாட்டுக்கு சிறந்த தினமாகும். வைகாசி விசாகம் என்பது முருகனின் பிறந்த நாள். தமிழைப் போன்ற இளமையும் அழகும் மிளிரும் முருகக் கடவுளை அன்றைய தினத்தில் வழிபடுவது சிறந்ததாகும்.

Arulmigu Thayar Valli, Thayar Devasena samedha Sikkal Singaravelan, Picture Credit
Story of Sikkal Singaravelan, Picture Credit & More Information - Dinamalar
  
இதில் பங்குனி உத்திரத்துக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. மங்கலம் மற்றும் சுபகாரியங்களுக்கான தினமாக பங்குனி உத்திரம் விளங்குகிறது. கிரகங்களில் மாங்கல்யத்துக்கும், திருமணத்துக்கும் காரண கர்த்தாவான செவ்வாய் பகவானின் அதிபதி என்பதால், முருகனை பங்குனி உத்திரத்தில் பெண்கள் வழிபடுவது மிகவும் அவசியம்.

அவ்வகையில் பங்குனி உத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்த விசேஷ தினமாகிறது. திருமணத் தடைகள், மகப்பேறு பிரச்சினைகள், உடல் ஆரோக்கியம், இல்லறத்தில் சிக்கல், மன சிக்கல்கள், ஜெனன கால ஜாதகங்களில் இருக்கும் குறைபாடுகள் இவற்றை நிவர்த்தி செய்து கொள்ள பங்குனி உத்திரமே மிகவும் எளிமையான மற்றும் சக்தி வாய்ந்த பரிகார தினமாகும்.

Arulmigu Thayar Vallli, Thayar Devasena sametha Thiruthani Subramanya Swami, Picture Credit & Additional Information - Dinamalar
வரும் மார்ச் 30-ம் தேதி 2018 (வெள்ளிக்கிழமை) { 2017: ஏப்ரல் 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) } பங்குனி உத்திரமாகும். அன்றைய தினம் மவுன விரதம் மற்றும் விரதம் மேற்கொண்டு முருகனை மனதில் நிறுத்தி வழிபட்டால் மேற்கண்ட அனைத்து தடைகளும் நீங்கப் பெறுவது உறுதி. 16 செல்வங்களுக்கும் அதிபதியான முருகக் கடவுளை அன்பர்கள் அனைவரும் பங்குனி உத்திரத்தில் வழிபட்டு எல்லா வளங்களையும் பெற பிரார்த்திக்கிறேன்.


செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. 

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே.  
 

Amma Sri Valli Thayar, Amma Sri Devasena Thayar sametha Arulmigu Appan Sri Subramaniya Swamy, Vallakottai, Source & more information
 

   

Om Guruve Namaha.....



நேசத்துடன்
குபேரன் ஜோதிடர்