உப்பிலியப்பன் கோவில், திருநாகேஸ்வரம்
Oppu illa Appan, Oppliappan!
உப்பிலியப்பன் கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்
தஞ்சாவுர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108
திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும்.
மூலவர் - உப்பிலியப்பன்
உற்சவர் - பொன்னப்பன்
அம்மன் - பு மா தேவி
பழமை - 1000 - 2000 வருடங்கள்
ஊர் - திருநாகேஸ்வரம்
மாவட்டம் - தஞ்சாவுர்
தல வரலாறு
மகாவிஷ்ணுவின் மனைவியும், லட்சுமியின் ஒரு அம்சமுமான புமாதேவி,
விஷ்ணுவிடம், எப்போதும் மகாலட்சுமியை மட்டும் மார்பில் தாங்கிக்
கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாருங்கள், என்று
கேட்டாள்.
மகாவிஷ்ணு அவளிடம், நீ புலோகத்தில் ஒரு ரிஷியின் மகளாக, திருத்துழாய்
(துளசி) என்ற பெயரில் பிறந்து இந்த பேற்றைப் பெறுவாய், என்றார்.
இச்சமயத்தில், என்றும் பதினாறு வயதுடைய மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமியே
தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி தவமிருந்தார்.
லட்சுமியின் அம்சமான புமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசிச்செடிக்கு கீழே
கிடப்பதைக் கண்டார். தன் ஞானதிருஷ்டியால் அவள் லட்சுமியின் அம்சம் என்பதை
அறிந்து, துளசி என பெயர்சுட்டி வளர்த்து வந்தார். திருமண வயது வந்த போது,
திருமால், ஒரு முதியவர் வேடத்தில் சென்று அவரிடம் பெண் கேட்டார்... மார்க்கண்டேயர் சம்மதிக்கவில்லை.
மேலும், சிறியவளான என் மகளுக்கு சாப்பாட்டில் சரியாக உப்பு போட்டுக்கூட
சமைக்கத்தெரியாது. அத்தகையவளை நீங்கள் மணம் முடிப்பது சரிவராது என்று
ஒதுங்கிக் கொண்டார். திருமாலோ விடுவதாக இல்லை, உப்பில்லாத சமையலாக
இருந்தாலும் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வற்புறுத்தினார்.
Thirunageshwaram (Thiruvinnagaram), Arulmigu Oppliappan, Thayar Bhoomadevi, Sri Markandaya Maharishi Image source |
தன் தவ வலிமையால் வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர்,
தன் மகளை மணம் முடித்து கொடுத்தார். உப்பில்லாத சாப்பாடு சாப்பிட
ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமையுடையவர்
என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் திருநாமம் பெற்று அத்தலத்தில் மனைவியுடன்
எழுந்தருளினார். துளசிதேவி அவர் மார்பில் துளசிமாலையாக மாறி நிரந்தரமாக
தங்கினாள்.
தல சிறப்பு
மார்க்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம்
தந்தவர். இத்தலம் செண்பகவனம், ஆகாசநகரம், திருவிண்ணகர், மார்க்கண்டேய
க்ஷேத்திரம், ஒப்பிலியப்பன் கோவில், தென் திருப்பதி என்ற பெயர்களும்
இத்தலத்திற்கு உண்டு.
உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.
பிரார்த்தனை
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும்.
இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு
கிட்டும் என நம்பப்படுகிறது. திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன்
கருதப்படுகிறார்.
Thirunageshwaram, Thayar Seetha Samadha Sri Ramar. Image Source |
இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் தம்பதிகளின் ஒற்றுமை அதிகரிக்கும். சகிப்புத்தன்மை அதிகரிக்கும்.
Om Guruve Namaha....
Om Guruve Namaha....